ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் எங்களது பந்துவீச்சு உத்தி சரியாக செயல்படவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
நியூ சண்டிகர் மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வியாகும் இது.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப்...
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனாவிடம், இந்திய அணி தோல்வி கண்டது. டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்திய அணிகள் மோதின. முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் 19-21, 21-8, 12-21 என்ற கணக்கில் சீனாவின் லீ ஷி பேங்கிடம் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக்...
ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் அணி இந்த சீசனின் மிக அதிக ஸ்கோரைப் பதிவு செய்து சாதனை படைத்தது.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ஸ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க...
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், அனுக்குல் ராய் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 11,12-வது ஓவர்கள் எங்களது வெற்றியைப் பறித்தன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பவர்பிளே சென்ற விதத்தைப் பார்க்கும்போது,...
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் என்று தோன்றுகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டி குறித்து ஜியோஹாட் ஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின்...
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. ஆனால், காயம் காரணமாக எம்.எஸ்.தோனி இதுவரை சி எஸ்கே அணிக்காக விளையாடவில்லை. இது சென்னை ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது: தோனியின் காயத்துக்கு...
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஃபேல் காண்ட்ராவுடன் மோதினார். அதில் வீர் சோட்ரானி 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளையில் மற்ற இந்திய வீரர்களான அபய் சிங் 9-11, 11-7, 4-11,...
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 68, டீன் ஃபாக்ஸ்கிராப்ட் 59, வில் யங் 30,...
“எதிரணியைத் துளைக்கும் பந்துவீச்சு எங்களிடம் இல்லை” – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்தனே வருத்தம்
admin - 0
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒட்டுமொத்தப் பந்துவீச்சு துறையின் திறமையின்மை குறித்தும், குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறுவது குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி ஸ்ரேயஸ்...









