‘500 ரன்கள்’ பிட்சில் பும்ரா நிகழ்த்திய அற்புதம், அக்சரின் 2 கேட்ச்… – இந்திய வெற்றியின் அடித்தளம்!
admin - 0
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 499 ரன்கள் குவிக்கப்பட்டன. இத்தகைய மட்டரகமான மட்டைப் பிட்சில் பும்ரா நிகழ்த்தியது உண்மையில் மிகப்பெரிய அற்புதம் என்றுதான் கூற வேண்டும். அதே போல் அக்சர் படேலின் 2 ‘மேட்ச் டர்னிங்’ கேட்ச்களும் இந்திய வெற்றியில் மிக மிக முக்கியமானவை.
சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ் பற்றி சொல்வதற்கில்லை, இனி அவர் அப்படித்தான் ஆடுவார். ஆடப்போகிறார்......
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டிகள் இன்று (5-ம் தேதி) செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் தொடங்குகிறது.
இதில் தளபதி ஸ்டாலின் எஃப்சி, வருமான வரித்துறை ஆர்சி, மத்திய கலால் துறை, ஆக்டோபஸ் மரைன், ஐசிஎஃப், சென்னை நகர காவல்துறை, இந்தியன் வங்கி எஸ்&ஆர்சி, டிபிஒய்சி கீழ்ப்பாக்கம், சென்னை சுங்கவரித்துறை, தமிழக காவல்துறை,தாவூத் மெமோரியல் எஃப்சி, ஏஜிஓஆர்சி ஆகிய 12...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திரமுமான எம்.எஸ்.தோனியின் வீடு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிமாலியா பகுதியில் அமைந்துள்ளது.
சமீபத்தில் தோனி தனது வீட்டின் அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றது காவல்துறையின் தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 183-ன் கீழ், தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ராஞ்சி போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தோனி...
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே - வேலம்மாள் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்மாள் கல்லூரி அணி 19.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மிதுன் 48, ரோஹித் 44 ரன்கள் சேர்த்தனர்....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 10.2 ஓவர்களில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. குயிண்டன் டி காக்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட நிலையில் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தது....
உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று முதல் (மார்ச் 4) வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒடிசா மாநிலத்திலுள்ள கேஐஐடி பல்கலைக்கழகம் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரு பிரிவிலும் சேர்த்து 52 நாடுகளைச் சேர்ந்த 82 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
லீக் மற்றும் நாக்-அவுட் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கேஐஐடி பல்கலைக்கழக...
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறவிருந்த ‘ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்’ தொடரில் பங்கேற்பதற்காக இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து துபாய் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக துபாய் வான் எல்லை மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பி.வி.சிந்து துபாய் விமான நிலையத்தில் பல மணிநேரம் சிக்கித் தவித்தார். தான் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தனது பயிற்சியாளர் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய...
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஆடவர் பிரிவில் சென்னை எஸ்ஆர்எம், கோவை கற்பகம் பல்கலைக்கழகம், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி,...
விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதான லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் சாதனை படைத்திருந்தது.
இதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டுக்கான லாரஸ் விருதுக்கு ஆண்டின் சிறந்த அணிகள் பிரிவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர்...










