சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக முதல் நாளில் நடைபெற இருந்த அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த ஆட்டங்கள் 2-வது நாளான நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டிகளை பகல் 12 மணிக்கு தொடங்க திட்டமிட்டு...
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
29 வயதான மந்தனா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசியிருந்தார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 731 புள்ளிகளுடன் 6 இடங்கள்...
ஆஸ்திரேலியாவுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
admin - 0
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட...
5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா எங்களுக்கு சவால் கொடுப்பார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 201 ரன்களும், விமல் குமார் 189 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 127...
ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலிண்டா பென்கிக்கும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவும் மோதினர். இதில் பெலிண்டா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.
பெலிண்டா பென்கிக்குக்கு இது 10-வது டபிள்யூடிஏ டென்னிஸ் பட்டமாகும்.
பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி
admin - 0
களத்தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் அண்மையில் முடிவடைந்தது. இதில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் மூத்த வீரரான...
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்பைக்கான ரக்பி போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்திய ஆடவர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியினர் 14-10 என்ற கணக்கில் லெபனானையும், 2-வது ஆட்டத்தில் 26-5 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற கால் இறுதியில் இந்தியா 21-7 என்ற கணக்கில் ஈரான் நாட்டு அணியை வீழ்த்தி...
காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்து, அலெக்ஸ் கேரியை அவுட்டாக்கினார் ஸ்ரேயஸ்.
பந்தை பிடித்த...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்...









