இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறவிருந்த ‘ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்’ தொடரில் பங்கேற்பதற்காக இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து துபாய் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக துபாய் வான் எல்லை மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பி.வி.சிந்து துபாய் விமான நிலையத்தில் பல மணிநேரம் சிக்கித் தவித்தார். தான் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தனது பயிற்சியாளர் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய...
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஆடவர் பிரிவில் சென்னை எஸ்ஆர்எம், கோவை கற்பகம் பல்கலைக்கழகம், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி,...
விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதான லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் சாதனை படைத்திருந்தது.
இதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டுக்கான லாரஸ் விருதுக்கு ஆண்டின் சிறந்த அணிகள் பிரிவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வருகிறது. லீக் சுற்றில் 4 ஆட்டங்கள், சூப்பர் 8...
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. தனது 8-வது சதத்தை விளாசிய கேப்டன் அலிசா ஹீலி 98 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 27 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் குவித்தார்.
பெத் மூனி 84 பந்துகளில், ஒரு சிக்ஸர்,...
பிராக் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், செக்குடியரசின் டேவிட் நவராவுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 72-வது நகர்த்தலின் ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
நடப்பு சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்விந்த் சிதம்பரம் தனது 4-வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அர்விந்த்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் சிகந்தர் ராசா 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். கிளைவ்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் நேற்று மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. கேப்டன்...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
196 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.2 ஓவர்களில் எட்டியது. இதில் சஞ்சு சாம்சனின் பங்கு 97 ரன்கள்....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
நாளை (மார்ச் 1-ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இரு முறை சாம்பியனான...










