இத்​தாலி​யில் நடை​பெற்று வரும் ஐஎஸ்எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்​டி​யில் இந்​திய வீராங்​கன் நீரு தண்டா தங்​கப் பதக்​கம் வென்​றார். இத்​தாலி​யின் லொனேட்டோ நகரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற மகளிர் டிராப் பிரி​வில் அதிக புள்​ளி​கள் குவித்து முதலிடம் பிடித்​தார் நீரு தண்​டா. இதன்​மூலம் ஐஎஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை சீசனின் ஷாட்​கன் தனி​நபர் பிரி​வில் முதல் தங்கம் வென்​றவர் என்ற பெரு​மையை நீரு தண்டா பெற்​றார். பிரான்ஸ் வீராங்​கனை...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்​கள் ஹர்​ஷித் ராணா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் காயமடைந்​துள்​ள​தால் அவர்களுக்குப் பதிலாக அணி​யில் பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இந்​திய கிரிக்​கெட் அணி தற்​போது இங்​கிலாந்​தில் டி20, ஒரு​நாள் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் இந்​திய அணி​யில் இடம்​பெற்​றிருந்த ஹர்​ஷித் ராணா காயம் அடைந்​துள்​ளார். அவருக்​குப் பதிலாக தற்​போது பிரின்ஸ் யாதவ் சேர்க்​கப்​பட்​டுள்​ளார் என்று இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) நேற்று...
நடப்பு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜன்​னிக் சின்னர், தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் உடன் சின்னர் பலப்பரீட்சை மேற்கொண்டார். உலக டென்னிஸ் வீரர்களுக்கான (ஆடவர்) தரவரிசையில் சின்னர் முதலிடத்திலும், ஸ்வெரேவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற...
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டலில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 49 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வைபவ் சூர்யவன்ஷி 15, அபிஷேக் சர்மா 16, இஷான் கிஷன் 4, ஷிவம்...
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே கோல் அடித்து அசத்தினர். பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அணி பந்தை அதிக நேரம் தன்...
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஷபாலி வர்மா 0, யாஷ்டிகா பாட்டியா 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களில்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. மியாமி ஹார்ட் ராக் மைதானத்தில் நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி, நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் காங்கோவையும் ரவுண்ட் ஆஃப்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி இறுதி ஆட்டத்தில் நாளை காலை 6.30 மணிக்கு கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி, சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா, நடப்பு சாம்பியனுக்கு தகுந்தபடியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாக் அவுட் சுற்றில் கேப் வெர்டேவை 3-2 என்ற கோல் கணக்கிலும், அதன்பின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் எகிப்தை 3-2 என்ற கணக்கிலும்...
கிலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பலே தலா ஒரு கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பை வீணடித்த எம்பாப்பே, இரண்டாவது பாதியில் கோலும், ஒரு கோலுக்கான (அசிஸ்ட்) உதவியும் செய்து ஆட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்தார். மொராக்கோ அணியின் முக்கிய ஸ்ட்ரைக்கரும் உந்து சக்தியுமான...
டிஎன்​சிஏ சார்​பில் நடத்​தப்​படும் டிஎன்​பிஎல் தொடரின் 10-வது சீசன் வரும் ஆகஸ்ட் 4 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்​முறை போட்டி 2 கட்​டங்​களாக கடத்தப்படுகிறது. முதல் கட்ட போட்டி ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல்லிலும், 2-வது கட்ட போட்டி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் 18-ம் தேதி ​முதல் 28-ம் தேதி வரை​யும் நடை​பெறும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணை...