Google search engine
ஆஷஸ் கிரிக்​கெட் தொடர் நிறைவடைந்​துள்ள நிலையில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்​கெட் போட்டியில் ஆஸ்​திரேலிய வீரர்​கள் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்​மான் கவாஜா உள்ளிட்ட வீரர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர். ஆஸ்​திரேலி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக் போட்​டி(பிபிஎல்) நடை​பெற்று வரு​கின்​றன. ஆஷஸ் கிரிக்​கெட் தொடர் ஆஸ்​திரேலி​யா​வில் நடைபெற்று வந்​த​தால் முன்​னணி வீரர்கள் பிபிஎல் போட்டி​யில் பங்​கேற்க முடி​யாத நிலை இருந்​தது. தற்​போது ஆஷஸ் தொடர் நிறைவடைந்து விட்​ட​தால்...
விஜய் ஹசாரே கோப்பைக்​கான கிரிக்​கெட் போட்​டி​யின் கால் இறுதி ஆட்​டங்​கள் வரும் 12-ம் தேதி முதல் தொடங்​க​வுள்​ளன. முதல் கால் இறுதி ஆட்​டத்​தில் கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்​நாட​க அணியுடன், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி​ மோதவுள்​ளது. விஜய் ஹசாரே கோப்​பைக்​கான லீக் போட்​டிகள் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற்று வந்​தன. ‘எலைட்’ பிரி​வில் இடம் பெற்ற 23 அணி​கள் 4 பிரி​வாகப் பிரிக்​கப்​பட்டு மோதின. இதன்...
லிஸ்ட் ஏ கிரிக்​கெட் போட்​டிகளில் ஆஸ்​திரேலிய முன்​னாள் வீரர் மைக்​கேல் பெவனை, இந்​திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முந்​தி​யுள்​ளார். விஜய் ஹசாரே கிரிக்​கெட் போட்​டி​யில் மகா​ராஷ்டிர அணியின் கேப்​ட​னாக செயல்​பட்டு வரு​கிறார் ருது​ராஜ் கெய்க்​வாட். பல போட்​டிகளில் விளை​யாடி அவர் சதங்களைக் குவித்​துள்​ளார். நேற்று முன்​தினம் கோவா அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் ருது​ராஜ் கெய்க்​வாட் சதம் விளாசி​யுள்​ளார். இதன்​மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட் போட்​டிகளில் அவர் மொத்​தம் 5,060 ரன்​களைக் குவித்​துள்​ளார். இந்த...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறு​திச் சுற்​றுக்கு இந்​திய வீராங்​கனை பி.​வி. சிந்து முன்​னேறி​யுள்​ளார். மலேசி​யா​வின் கோலாலம்​பூர் நகரில் இப்​போட்டி நடைபெற்று வரு​கிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்​றையர் கால் இறு​தி​யில் பி.​வி. சிந்​து​வும், ஜப்​பான் வீராங்​க​னை​யும் 3-ம் நிலை வீராங்கனையுமான அகானே யமாகுச்​சி​யும் மோதினர். இந்​தப் போட்​டி​யின்​போது சிந்து முதல் செட்​டில் 21-11 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றார். 2-வது செட் தொடங்க இருந்​த​போது ஜப்​பான் வீராங்​கனை...
கிரிக்​கெட் விளை​யாட்​டின் நலனைக் கருத்​தில் கொண்டு பிரச்​சினையை தீர்க்க வங்​கதேச வாரி​யம் முன்வர வேண்​டும் என்று வங்​கதேச கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் தமிம் இக்பால் வேண்​டு​கோள் விடுத்துள்​ளார். வங்​கதேசத்​தில் நடை​பெற்ற இந்​துக்​கள் மீதான தாக்​குதல் சம்​பவம் கிரிக்​கெட்​டிலும் எதிரொலித்து வரு​கிறது. தாக்குதல் சம்​பவத்​தால் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணி​யில் இடம்​பெற்​றுள்ள வங்​கதேச வீரர் முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்​பினர் கோரிக்கை...
டபிள்​யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டி தொடர் மும்​பை​யில் இன்று தொடங்​க​வுள்​ளது. முதல் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யும் மோதவுள்​ளன. இந்​தி​யா​வில் ஆடரு​வருக்​கான ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரைப் போலவே மகளிருக்​கும் டபிள்​யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) உரு​வாக்​கப்​ பட்​டது. 2023-ம் ஆண்டு முதல் நடை​பெற்​று​வரும் இந்​தத் தொடரின் நான்​காவது சீசன் இன்று தொடங்​க​வுள்​ளது.மும்பை இந்​தி​யன்​ஸ், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு, குஜ​ராத் ஜெயன்ட்​ஸ்,யுபி வாரியர்​ஸ்,டெல்லி...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் கேரள அணியை வெற்றி கண்டது. அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. கேப்டன் என்.ஜெகதீசன் 126 பந்துகளில் 139 ரன்கள்(9 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய கேரள அணி 40.2 ஓவர்களில் 217 ரன்களுக்கு...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய மகாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பின்னர் விளையாடிய கோவா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தின் சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார். சிட்னியில் நேற்று நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்டார்க் மொத்தம் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர் என்ற ரங்கனா ஹெராத்தின் சாதனையை, மிட்செல் ஸ்டார்க் தற்போது சமன்...
சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா கடந்த வாரம் அறிவித்து...