டெக்சாஸில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு மிகேல் ஓயர்சபால் பெனால்டி கிக்கில் கோல் அடித்து முன்னிலை கொடுக்க, பிறகு 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ அற்புதமான கோலை அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. ஸ்பெயின் தனது ஆதிக்கமான ஆட்டத்தின் மூலம் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்கெட் போட்டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது நியூஸிலாந்து அணி. கயா​னா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 36 ஓவர்​களில் 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜான் கேம்​பல் 43, அமிர் ஜாங்கூ 24 ரன்​கள் சேர்த்தனர். ஒரு கட்​டத்​தில் விக்​கெட் இழப்​பின்றி 63 ரன்​கள் எடுத்திருந்த...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் இறுதிக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வின் அட்லாண்டாவில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் நாளை அதி​காலை 12.30 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா, இங்கிலாந்து அணி​யுடன் பலப்பரீட்சை நடத்​துகிறது. நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா தனது ஆதிக்​கத்​தைத் தொடரும் நோக்​கில் களமிறங்​கு​கிறது. மறு​புறம், 1966-ம் ஆண்​டுக்கு பிறகு உலகக் கோப்​பையை வெல்​லும் கனவுடன் காத்​திருக்​கும் இங்​கிலாந்து அணி இம்​முறை அந்த...
லண்டன்: கோலியும், ரோஹித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பலம் என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது.  இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை இந்திய...
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-7 (7), 7-6 (2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜன்னிக்...
 இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தாகி இருந்தது. டி 20 தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளன. இதன் முதல் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30...
ஒரு மாத காலமாக உலகம் முழுவதையும் கால்பந்து காய்ச்சலில் ஆழ்த்திய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. இறுதிக்கட்டத்தின் முதல் அத்தியாயமாக, உலகக் கால்பந்தின் ஐரோப்பிய வல்லரசுகளான ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் அரை இறுதி சுற்றில் நாளை (15-ம் தேதி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது. கால்பந்தின் பழைய மரபையும், நவீன வேகத்தையும்...
ஸ்பெயின் அணியை கண்டு அஞ்சவில்லை. அவர்களின் ஆட்டத்திறனை மதிக்கிறோம் என பிரான்ஸ் அணி வீரர் இப்ராஹிம் கோனேட் கூறியுள்ளார். நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி புதன்கிழமை (ஜூலை 15) அதிகாலை 12.30 மணிக்கு தொடங்குகிறது. “என்னுடைய கருத்​தின்​படி பிரான்ஸ் அணி யாரை​யா​வது பார்த்​து பயந்​தால் அது எங்​கள் அணி​யாகவே...
ஆடு​களத்​தின் சூழலுக்கு ஏற்ப நாங்​கள் மாறிக் கொள்​ள​வில்​லை. இதனால்​தான் இங்​கிலாந்​துக்கு எதி​ரான 5-வது டி20 போட்​டி​யில் தோல்வி கண்​டோம் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார். இந்​திய கிரிக்கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி20 போட்​டிகள், 3 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. முதலில் டி20 தொடர் நடை​பெற்று வந்​தது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3-0 என்ற கணக்​கில் இங்​கிலாந்து...
இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் சவுரவ் கங்குலி, இந்​திய மகளிர் அணி முன்​னாள் கேப்​டன் அஞ்​சும் சோப்ரா, இங்​கிலாந்து முன்​னாள் கேப்​டன் கெவின் பீட்டர்சன் ஆகியோ​ருக்கு சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சிலின் ​(ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேம் கவுர​வம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்காட்​லாந்து தலைநகர் எடின்​பர்க்​கில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்த கவுர​வம் கங்​குலி, அஞ்​சும் சோப்ரா, கெவின் பீட்​டர்​சன் ஆகியோ​ருக்கு அளிக்​கப்​பட்​டது. இந்த விழா​வில் கலந்​து​கொண்ட ஐசிசி...