சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை அணி, ஏஜிஓஆர்சி அணியுடன் மோதியது.
இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் 30-வது நிமிடத்தில் கப்மின்லால் கோல் அடித்தார். தமிழக காவல்துறை அணி தரப்பில் 74-வது நிமிடத்தில்...
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 652 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தொடர்கிறார்.
அதேவேளையில் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஓர் இடத்தை இழந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 157 ரன்கள் விளாசிய நியூஸிலாந்து...
ஏஎஃப்சி மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சீன தைபே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் 39-வது நிமிடத்தில்...
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 முறை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றவரும், தனது காலத்தில் ஆதிக்கம் செலுத்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவருமான மேத்யூ ஹைடன், தனது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தையும், நவீனகால டி20 பேட்டிங் நுணுக்கங்களில் உள்ள தனது திறமையையும் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்...
ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ள எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. இதன் பின்னர் கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த வரிசையில் தற்போது 2026-ம் ஆண்டு டி20...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். அவர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 97* ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 89 ரன்களும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 89 ரன்களையும் விளாசி அணியின் வெற்றிகளில்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விஐபி மாடத்திலிருந்து ண்டுகளித்தார். போட்டி முடிந்து இந்திய அணி கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே, தோனி ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார்.
அதில், “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையையும்,...
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சகாப்தம் படைக்கிறோமா? – மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
admin - 0
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஐசிசி கோப்பைகளை (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) வென்றிருப்பது ஒரு அசாத்தியமான சாதனை என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், 1999-2007 காலகட்டத்தில் ஆஸ்திரேலியா காட்டிய ஆதிக்கத்துடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மிக எதார்த்தமான ஒரு பார்வையை முன்வைக்கிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன்...
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று வரலாறு படைத்தது. இதில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்களித்தவர் இஷான் கிஷன். இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசியது குறிப்பிடத்தக்கது. இதோடு மூன்று கேட்ச்களையும் அவர் பிடித்திருந்தார்.
நியூஸிலாந்து அணி உடனான இறுதிப் போட்டிக்கு முதல் நாளன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இஷான் கிஷனுக்கு கார் விபத்தில் தனது சகோதரி (Cousin) மற்றும்...










