இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறப் போவது யார் என்பதில் 2 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய...
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற தமிழக சிறுமி ஆதிரை, 7 முதல் 9 வயது பிரிவினருக்கான ஸ்கேட் போர்ட் பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சிஷ்யா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் ஆதிரை, பயிற்சியாளர் விஜய் டாமினிக்கிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பிரிஸ்பன் போட்டியின் முடிவில்...
மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பும்ராவை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும் என...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது விளையாட்டு உத்தியை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ஜி. திரிஷா 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்....
நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் அஸ்வின்: பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்
admin - 0
நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த...
ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஹாக்கி இந்தியா லீக்கின் 6-வது சீசன் போட்டிகள் வருகிற 28-ம் தேதி தொடங்குகிறது. 2025-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒடிசாவில் உள்ள ரூர்கேலா மற்றும் ராஞ்சியில் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி முதல் முறையாக பங்கேற்கிறது. இந்த அணியை சார்லஸ் குரூப்...
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஈக்விடாஸ் நிறுவனம் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தமிழகம் மற்றும் கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 23 மாவட்டங்களில் இருந்து 108 பள்ளிகள் பங்கேற்கின்றன.
ஜேஎஸ்கே டி20 தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான அஸ்வின், 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த வகையில் அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2011-ம் ஆண்டு...









