4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியின் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2-வது இடத்தை இலங்கையின் டி.கே. திமேஷியும், 3-வது இடத்தை வி.பி. நேத்ரா சமாதியும் பிடித்தனர்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி (19.19...
இந்தியாவில் எஸ்ஜி பந்துகளை எதிர்கொள்வது பெரிய சவால்: சொல்கிறார் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ்
admin - 0
வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதிலும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்த நிலையில் லிட்டன் தாஸ் தனது அபாரமான ஆட்டத்தால் சதம் விளாசி...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வென்றுள்ளது இலங்கை அணி. பதும் நிசங்கா அபாரமாக பேட் செய்து சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 263 ரன்கள் எடுத்திருந்தது.62 ரன்கள்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற...
புரோ கபடி 11-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அக்டோபர் 18-ல் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி மோதுகின்றன.
12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும்...
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இருந்தது. இந்நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி...
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து: உத்வேகம் தரும் வெற்றி என பெருமிதம்
admin - 0
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது என்பது அவரின் திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையைத்...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில்நேற்று மாலை வரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றிருந்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
போட்டியின்...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 100.4 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரித்திக் ஈஸ்வரன் 140 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஜிவேரேவை 7-6 (7-2),...









