எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்த கெடு தேதி அன்று 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்கவைத்துள்ளது. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மீண்டும் விளையாடுகிறார். இப்படியாக பல்வேறு முன்கணிப்புகளை 10 அணிகளும் தகர்த்து தங்களுக்கு தேவையான வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளன....
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீரர்கள் மற்றும் 8 ஜோடிகள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தொடர் வரும் நவம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற உள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இதுவரை இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், ரஷ்யாவின்...
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சதம் விளாசினார்கள்.
சட்டோகிராமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி களமிறங்கினார்கள். நிதானமாக...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் உள்ள சத்தீஸ்கர் - தமிழ்நாடு அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் 500 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது.
இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி...
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய மகளிர் அணி வென்றது.
இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து மகளிர் அணி 49.5 ஓவர்களில் 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 96 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா பிலிமெர் 39,...
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியுடன் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணா, ரஞ்சி கோப்பை தொடரில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 2...
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில் இந்திய அணியின் இந்த திடீர் சரிவு மற்ற அணிகளுக்கான வாய்ப்பின் கதவுகளை திறந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 62.82 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது....
நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை விருதை வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிட்-ஃபில்டர் ரோட்ரி. தனது தேசிய அணி மற்றும் கிளப் அணியில் சிறந்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
2023-24 பிரீமியர் லீக் சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி பட்டம் வெல்லவும், யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் அவரது ஆட்டம் உறுதுணையாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும்...
டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியாவுக்கு 24 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நிறைவுற்ற இப்போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் 24 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. இந்திய வீரர் சிவராஜன் சோலைமலை ஒற்றையர் எச்எச்6 கிளாஸ் பிரிவில் தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் சிவராஜன், சுதர்சன்...
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும். அதை தற்போது நியூஸிலாந்து அணி செய்துள்ளது. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஓர்...










