Google search engine
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 348 ரன்களும், இங்கிலாந்து 499 ரன்களும் குவித்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 3-ம்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது. உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்டி சிங்​கப்​பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்​பியனான சீனா​வின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்​டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்​டி​யில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்​தார். 2-வது சுற்று டிரா​வில் முடிவடைந்​தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். தொடர்ந்து...
சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஆடவர் பிரிவில் லக்சயா சென் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். லக்னோவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வூ லுவோ யூவை வீழ்த்தி பட்டம் வென்றார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கடைசியாக சிந்து...
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் கிரிக்கெட் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2 அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி...
உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு...
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 83 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 2, டாம் லேதம் 47, ரச்சின் ரவீந்திரா 34, டேரில் மிட்செல் 19, கேன் வில்லியம்சன் 93, டாம் பிளண்டெல் 17, நேதன்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது. 3-வது சுற்றில் குகேஷ் 37-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் இருவரும் தலா 1.5 புள்ளிகளை பெற்று...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி இந்த தொடரில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ அறிவித்தது. இதுதொடர்பாக ஐசிசி-க்கு தகவல் தெரிவித்த பிசிசிஐ, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு சம்மதம்...
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் பகலிரவாக...