Google search engine
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜமைக்காவில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 164 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் 146 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 59.5 ஓவர்களில் 268 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜாகர் அலி 91,...
தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் ஆதரவோடு, எஸ்ஐவியுஎஸ் இந்தியா மற்றும் எஸ்ஐவியுஎஸ் தமிழ்நாடு ஆகிய இணைந்து 2024-ம் ஆண்டிற்கான எஸ்ஐவியுஎஸ் இந்தியா தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள நீச்சல் மையத்தில் நடத்தி வருகின்றன. 3 நாட்கள் கொண்ட இந்த போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் உடையோருக்கான இந்த போட்டியில்...
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகமது ராயன் 35, அக்சத் ராய் 26, ஏத்தன் டிசோசா 17, உத்திஷ்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில்...
ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசனை வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடத்துகிறது. இதில் இம்முறை 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்தயத்துக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 10-ம் தேதி முன்பதிவிற்கான இறுதி தேதியாகும். வாட்ஸ்அப் செயலி வழியாகவும் முன்பதிவு செய்வது இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழு...
இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் எனவும், அவரை எதிர்கொள்வதில் உள்ள வலிமையான சவாலைப் பற்றி தனது பேரக்குழந்தைகளிடம் பெருமையுடன் கூறுவேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வரும் டிசம்பர் 6-ம் தேதி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அடிலெய்டு நகரில் விளையாட உள்ளன. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதனால் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளதால் நெருக்கடியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை அணுகுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்...
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த யு-19 இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது அமான் 118 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன....
இந்தியாவுக்கு எதிராக பெர்த் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷுக்கு பந்து வீச்சின் போது கணுக்காலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர், வரும் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. இதற்கிடையே அவருக்கு மாற்று வீரராக பியூ வெப்ஸ்டரை அணியில் சேர்த்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இந்நிலையில் 33...