தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0 என்ற கணக்கில் டெல்லியை சேர்ந்த சுதான்ஷு குரோவரை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாச்சார்ஜி 3-1 என்ற கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் பிரீயேஷ் ராஜ் சுரேஷையும், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையை...
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவை தோற்கடித்தது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் வைஷ்ணவி விட்டல் பால்கே (2-வது நிமிடம்), சங்கீதா குமாரி (33-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (40-வது...
ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சனுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 16-21,...
சஞ்சு சாம்சன் இடத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம், வேறு வீரருக்குப் பதிலாக கில் ஆடட்டும்: ரவி சாஸ்திரி
admin - 0
ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக் காலி செய்யத்தான் ஷுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளனர் என்பதே அது. இது உண்மைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர்.
டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் இல்லாத போது பதிலி தொடக்க வீரராகத்தான் சஞ்சு சாம்சன் ஆடினார், என்று...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று இரவு...
புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் விளையாடின. சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களும், டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்களும் எடுத்தன.
23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதரபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 70 ஓவர்களில்...
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலகவில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் புஜே ஆகியோர் அடங்கிய அணி 235-233 என்றபுள்ளிகள் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப்...
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்காவும், அமெரிக்க வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் 8-ம் நிலையில் இருப்பவருமான அமண்டா அனிசிமோவாவும்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள், ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்கள், விளம்பரங்கள், டிக்கெட் மூலம் வருவாய் என பலவழிகளில் பிசிசிஐ வருவாயை ஈட்டுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ-க்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன் போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அனுமதி வழங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார் சுப்ராயன். இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலுள்ள நேஷனல் கிரிக்கெட் சென்டரில், அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. சுயபரிசோதனை...









