Google search engine
​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்​லபுரத்​தில் நடை​பெற்ற பொதுக்​குழுவை அங்​கீகரித்து இந்​திய...
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ரான வழக்​கில் நிலை அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸார் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் அணுகி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளார். சென்னை அருகே காட்​டாங்​குளத்​தூரில் கடந்த மே மாதம் நடை​பெற்ற சைவ சித்​தாந்த மாநாட்​டில் பங்​கேற்க வந்த மதுரை ஆதீனத்​தின் கார் மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி​யது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், இதில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு...
அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என்ற எனது கருத்​துக்கு தொண்​டர்​கள், பொது​மக்​களிடையே வரவேற்பு கிடைத்​துள்​ளது. இதை புரிய வேண்​டிய​வர்​கள் புரிந்து கொள்ள வேண்​டும் என முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார். முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி அதி​முக எம்​எல்ஏவு​மான செங்​கோட்​டையன், கடந்த 5-ம் தேதி, செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது,; ‘அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும். இதைச் செய்​யத் தவறி​னால், இதே மனநிலை​யில் இருப்​பவர்​களை சேர்த்து...
குன்​னூர் கோடேரி கிராமத்​தில் ஒரே வீட்டு எண்​ணில் 79 வாக்​காளர்​கள் உள்​ள​தாக வந்த தகவலை அடுத்​து, வட்டாட்சியர் உட்பட அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்ட குன்​னூர் சட்டபேரவை தொகு​தி​யில், கோடேரி கிராமம், பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்​காளர் பட்​டியலை, 12-வது வார்டு உறுப்​பினர் மனோகரன் ஆய்வு செய்​த​தில் குறை​களை கண்​டறிந்​தார். அதில், குறிப்​பிட்ட வாக்​குச் சாவடிக்கு உட்​பட்டு 12, 17-ம் எண் வார்​டு​கள்...
அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா. சிறந்த...
தமிழகத்​தில் யாரும் தவிர்க்க முடி​யாத மாபெரும் இயக்​கம் தேமு​திக என்று நம் உழைப்​பால் உணர்த்​து​வோம் என பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். 21-ம் ஆண்டு தொடக்​கத்​தையொட்டி தொண்​டர்​களுக்கு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா எழு​திய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்​பாற்​பட்ட கட்​சி​யாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்​பாட்​டோடு சனாதனம், சமதர்​மம், சமத்​து​வத்​தைக் கடைப்​பிடிக்​கும் கட்சி​யாக தேமு​திக என்​றும் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மிகப்​பெரிய சவாலாகும். இத்தேர்தலிலும் நாம் மகத்​தான வெற்றி...
விரை​வில் என்​னுடன் 3 எம்​எல்​ ஏக்​கள் வரு​வார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். ஓசூரில் நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ராம​தாஸ் பேசும்​போது, “உங்​கள் குழந்​தைகளுக்கு செல்​போன் வாங்​கிக் கொடுக்​காதீர்​கள். எனது மகள் காந்​தி​மதி இன்று முதல்​முறை​யாக பேசி​னார். அவர் நன்​றாகப் பேசி​யுள்​ளார். தற்​போது என்​னுடன் 2 எம்​எல்​ஏக்​கள் உள்ளனர். விரை​வில் மீத​முள்ள 3 எம்​எல்​ஏக்​களும் என்​னுடன் வரு​வார்​கள்” என்​றார். முன்​ன​தாக ராம​தாஸ் மகள் காந்​தி​மதி பரசு​ராமன் பேசி​ய​தாவது: எனது...
அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் மீனாள் அம்​மாளின் படத்தை கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்​து​வைத்தார். முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயாரும், போஸ் தேவரின் மனை​வி​யு​மான மீனாள் அம்​மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாள​ராக இருந்​தார். உடல் நலக்​குறை​வால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்​மாள் கடந்த 8-ம் தேதி கால​மா​னார். இதையடுத்​து, அவரது உடல் மதுரை திரு​மங்​கலம் அரு​கில் உள்ள டி.குன்​னத்​தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப...
விஜய் தலை​மை​யில் தமிழகத்​தில் நிச்​ச​யம் ஒரு கூட்​டணி அமை​யும். அதில் அமமுக இணைவது குறித்து தற்​போது சொல்ல முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கும்​போது, நாங்​கள் எப்​படி அந்த கூட்​ட​ணி​யில் இருக்க முடி​யும்? முதல்​வர் வேட்​பாள​ராக பழனி​சாமி இருக்​கக்​கூ​டாது என்​பது​தான் எங்​களது கோரிக்​கை. தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தில் ஏராள​மான இளைஞர்​கள்,...
பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் மகேஸ்​வரி (50). இவர் 2 ஆண்​டு​களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்​தொகை பெற விண்​ணப்​பித்​தார். விண்​ணப்​பம் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டதற்​கான எந்த குறுஞ்​செய்​தி​யும் வராத​தால், விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாக கரு​தி​யுள்​ளார். இந்​நிலை​யில், கிணத்​துக்​கடவு ஒன்​றி​யத்​தில் ஜூலை 25-ம் தேதி நடந்த...