கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல்
admin - 0
கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர்,...
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் அரசின் சார்பில் மாதம்தோறும் ரூ.8,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்...
கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட முதல்வர் மீது பழிபோடுவதா? – இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர்கள் பதில்
admin - 0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பழனிசாமிதான், கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது பழிபோடுகிறார் என்று அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரச் சம்பவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அதிலும் அரசியல் செய்து வருகிறார். காவல்துறையின் கட்டுப்பாடுகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. ‘ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே...
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத் தலைவர் நேற்றும் விசாரணை நடத்தினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்தோர்...
தவெக வழக்கறிஞர் அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை நியமிக்கவும் இல்லை. கரூர் கூட்டத்தில் போலீஸார் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் உயிரிழந்தனர். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய்...
திண்டிவனத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் சந்தித்தார். இந்நிலையில், தைலாபுரத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று சென்று, பாமக நிறுவனர் ராமதாஸிடம், தனது குடும்பத்தில் நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பைக் கொடுத்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பாமக தரப்பில் கேட்டபோது, “தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில்...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேற்று ஆறுதல் கூறினர். மேலும், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை...
கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் காட்டத்தை கிளப்பி இருக்கும் நிலையில், திமுக-வை விட்டுவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளை பழனிசாமி வம்புக்கிழுத்துப் பேசுவது ஏன் என்ற சர்ச்சையும் வெடித்திருக்கிறது.
அதிமுக - பாஜக உடன்படிக்கை ஏற்படுவதற்கு முன்பு திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளுக்கு, அந்தப் பக்கம் அணி மாறிவிடலாமா என்ற சபலமும் லேசுபாசாக இருந்தது....
கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள்...




