பாமக இளைஞர் சங்கத் தலைவராக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். பாமக தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜி.கே.மணியை ஆறுதல்படுத்தும் வகையில், அவரது மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை நிறுவனர் ராமதாஸ் வழங்கினார்.
ஆனால், அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக தமிழ்க்குமரன் பதவியிலிருந்து விலகினார். பின்னர், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்....
விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் நேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழிபோட முயற்சிக்கிறார் தவெக தலைவர்...
கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பட்டாசால் ஏற்படும் காற்று மாசுபாட்டைவிட நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவைதான் அதிக மாசு ஏற்படுத்தும். பெரிய முதலாளிகளை விட்டு விட்டு, சிவகாசி போன்ற சிறிய ஊரில் இருக்கும் சிறு முதலாளிகளின் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க...
அரசியல் நிகழ்ச்சிகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை: பழனிசாமி கருத்து
admin - 0
அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். தருமபுரியில் நேற்று பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தராததுதான் காரணம்.
அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், கரூர் சம்பவத்துக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்....
கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு...
சென்னை: நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாப்படும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து...
புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய டிஜிபி தேர்வு போட்டியில் டிஜிபி-க்களான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர்...
ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்
admin - 0
ஒரு கட்சித் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் தனது பாதுகாப்பை மட்டும் நினைத்து பயந்து சென்றதை இதுவரை பார்த்ததில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் ஆர்ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்ததுடன், தற்போதும் பலர்...
கரூர் நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்
admin - 0
கரூர் சம்பவம் தொடர்பாக பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்து,...
சென்னை புறநகர் பகுதிகளில் ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரை ரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்களில் (அக்.1, 2) வருகின்றன.
எனவே இன்றும், நாளையும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள்...










