மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான...
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி
admin - 0
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் முதல்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று, வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலுவலகம் சார்பில், பிரதமரின் விக்சித்பாரத் ரோஸ்கர் யோஜனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேவி பிரசாத் பட்டாச்சார்யா தலைமை...
ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’ (இறுதி நாள்) மீன் என்று அழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான துடுப்பு மீன் (Oar Fish) சிக்கியது சுமார் 10 கிலோ எடை, 5 அடி நீளம் இருந்த இந்த மீன், முதன்முறையாக பிடிபட்டதால் மக்கள் ஆர்வத் துடன் பார்வையிட்டனர்.
இதுகுறித்து...
“கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் விடிவுகாலம் வரும்!” – அரசியல் கணக்குகளை அலசும் கிருஷ்ணசாமி நேர்காணல்
admin - 0
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். வாக்காளர்களின் மனநிலை, கூட்டணி வியூகம் என பல்வேறு கேள்விகளுக்கு தனது பாணியில் ’ஷார்ப்பாக’ பதில் அளித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களது எண்ணம்...
மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்.8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வது கட்டாயம்
admin - 0
தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்டோபர் 8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்க இணையவழி மனு தாக்கல் முறை ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
இம்முறையில் வழக்கு தொடர்பான மனுக்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்து, நீதிமன்ற வலைதள முகவரியில் பதிவேற்றம் செய்து அனுப்பவேண்டும். இந்த முறையை பின்பற்றுவதில்...
அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம்
admin - 0
அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர்குமார் ஆகியோர், கோயிலுக்குள் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என...
ஊனம் தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடல் பகுதியை மாற்றுத் திறனாளி சிறுவன் 9 மணி நேரம் 11 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மப்பிரியா தம்பதியின் மகன் புவிஆற்றல் (12). முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இவர் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட...
திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய்தான் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். ஆனால், முதல்வர் கரூருக்கு சென்றதை வைத்து அதிமுக...
தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்... யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய ஒதுக்க வேண்டி இருக்கும். அதுவும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் பாடு சொல்ல வேண்டியதே இல்லை.
அப்படித்தான், பதவிக்கு வந்த நாளாவே ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜன், வெளியில புறப்பட்டாலே ஐம்பதாயிரத்தை எடுத்து கவர்ல போட்டு...
“திமுக அரசியல் எதிரி என்றால் அதை வீழ்த்துவது பற்றி விஜய் பேச வேண்டும்” – சீமான் சிறப்பு நேர்காணல்
admin - 0
தமிழக அரசியல் களத்தில் எல்லா விவகாரங்களிலும் அச்சப்படாமல் தன் கருத்தை முன் வைப்பதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிகர் சீமான் தான். கரூர் சம்பவத்தில் தொடங்கி, கடல் மாநாடு வரை தனது கருத்துகளை இந்த நேர்காணலில் வரிசைப்படுத்தியிருக்கிறார். அதில் இருந்து….
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் விபத்தா அல்லது சதியா?
மற்ற ஊர்களில் விஜய் பிரச்சாரம் செய்த இடங்கள் நான்கு வழிச் சாலைகளாக இருந்தன. கரூரில்...










