Google search engine
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? ​கொள்கை அளவில் மேலிடத்​தில் இருந்து கட்​டப்​படும் கட்சி எங்​கள் கட்​சி. ஆனால், மேலிடத்​திலிருந்து உத்​தரவு வரும் என்று...
ஆலயக் கட்சியின் ’முதன்மை’ பொறுப்பில் இருக்கும் மாண்புமிகு தனது மாவட்டத்தில் யாருக்கெல்லாம் இந்த முறை சீட் என்பதைவிட யாருக்கெல்லம் சீட் தரக்கூடாது என்பதை தரமாக முடிவெடுத்து வைத்திருக்கிறாராம். ‘அரங்கத்து’ பார்ட்டிக்கும் அவருக்கும் சுத்தமாக ஒத்துப்போகவில்லை. முகத்துக்கு நேராக வணக்கம் வைத்து முகஸ்துதி பாடும் ‘அரங்கத்து’ பார்ட்டி பொது இடங்களில் ‘முதன்மை’யை முரட்டுத்தனமாகப் போட்டுத் தாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். ‘அரங்கத்து’ பார்ட்டிக்கு வலுவான சாதியப் பின்னணி இருப்பதால் அவரை சட்டையைப் பிடித்துக்...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்டியிடும் தொகுதி என்பதால் எடப்பாடி இம்முறையும் தேர்தல் களத்தில் நட்சத்திர அந்தஸ்துக்கு தயாராகி வருகிறது. எடப்பாடி தொகுதிக்கும் பழனிசாமிக்குமான பந்தம் 1989-ல் இருந்தே தொடர்கிறது. இடையில் மூன்று தேர்தல்களைத் தவிர இப்போது வரைக்கும் எடப்பாடி அவர் கைக்குள் தான் இருக்கிறது. இந்த நிலையில், இம்முறை ‘வெல்வோம் 200’ என்று சொல்லிக் கிளம்பி இருக்கும் திமுக எடப்பாடியில் பழனிசாமியை எதிர்த்து யாரை நிறுத்தப் போகிறது...
கடந்த ஜூன் மாதம் மதுரை​யில் நடந்த திமுக பொதுக்​குழு கூட்​டத்​தில் பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், “மதுரை​யில் உள்ள 10 சட்​டமன்ற தொகு​தி​களி​லும் இம்​முறை திமுக வெற்​றி​பெற வேண்​டும். அதி​லும் குறிப்​பாக, மதுரை மேற்கு தொகு​தி​யின் வெற்றி முக்​கிய​மானது” என்று அமைச்சர் பி.மூர்த்​தி​யிடம் அழுத்​த​மாகக் கூறிச் சென்​றார். இதற்​காகவே மாநகர திமுக செய​லா​ளர் தளப​தி​யின் ஆளுகைக்​குள் இருந்த மேற்கு தொகு​தியை புறநகர் வடக்கு மாவட்​டச் செய​லா​ள​ரான பி.மூர்த்​தி​யின் எல்​லைக்​கும் மாற்​றி​னார். இதையடுத்து...
தென்காசி தெற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் இருந்த ஆலங்குளம் தொகுதியை நெல்லை திமுக உட்கட்சி உரசல்கள் காரணமாக, அண்மையில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் மாற்றிவிட்டது திமுக தலைமை. இதனால், இம்முறை ஆலங்குளத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார். தென்​காசி வடக்கு மாவட்ட திமுக​வின் கட்​டுப்​பாட்​டில் சங்​கரன்​கோ​வில், வாசுதேவநல்​லூர் தொகு​தி​கள்...
வயோதிகம் காரணமாக, பல சமயங்களில் சொந்தக் கட்சி தலைமைக்கு எதிராகவே எக்குத்தப்பாக பேசி வைரல் ஆகுபவர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களாக தொடர் வெற்றியைப் பெற்று வரும் இவர் இம்முறை ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார். ஆனால், அதை நடக்கவிடாமல் செய்ய திமுக சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த 1996-க்குப் பிறகு திண்டுக்கல்லில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெறாத திமுக, இம்முறை திண்டுக்கல்லாரை தோற்கடித்தே...
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடத்தியது தமிழக அரசு. அதற்கு ஒரு மாதம் முன்னதாகத்தான் (ஆகஸ்ட் 21) மதுரையில் தனது கட்சியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தினார் நடிகர் விஜய். இப்போது இந்த இரண்டு...
தேசியக் கட்சிக்கு தமிழகத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட வடபுல தலைவர் அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்தார். கூட்டணி தலைகளை சந்தித்துப் பேசிய தலைவர், அப்படியே சொந்தக் கட்சியின் பூத் கமிட்டி புள்ளியையும் அழைத்து, “எலெக்‌ஷன் வேலை எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?” என்று விசாரித்தாராம். அவருக்கு, என்னவெல்லாம் செய்திருக்கிறோம், என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று பவர் பாயின்ட்டில் செயல்விளக்கம் கொடுத்த பூத் கமிட்டி புள்ளி, அதற்கு முன்னதாக அந்த...
இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், ராஜபாளையத்துக்கு அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் கோபால்சாமி அதை அறிவிக்கும் முன்பாகவே தொகுதிக்குள் ஆதரவு திரட்ட ஆரம்பித்துவிட்டார். கடந்த 2011-ல் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ.வாக இருந்த கோபால்சாமி இப்போது பாஜகவில் இருக்கிறார்.நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான இவருக்கு, அவரது சிபாரிசிலேயே பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி வாய்த்ததாகச் சொல்வார்கள். இந்த...
பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார். கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன்,...