Google search engine
தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும்...
தமிழகத்தில் அக்.20 முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்.21ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48...
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை...
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று (அக்.20) சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் மட்டும்...
தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது....
கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவல்துறை பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், அரசின் அலட்சியத்தால் கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூரில் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் செருப்பு...
பேரிடர் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில அரசின் நிதியில் நவீன ஆம்பிபியன் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.193.93 கோடி செலவில் மீட்பு படையினருக்கு வேண்டிய மீட்பு உபகரணங்கள், கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. பேரவை துணைத் தலைவரின் கோரிக்கையை பரிசீலித்து,...
சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கொண்டு வந்தனர். அப்போது உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம்...
தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நில அளவு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவுவது தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் நேற்று அறிமுகம் செய்தார். சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. மாணவர் நலனுக்காகவும், உயர்கல்வியை மேம்படுத்தவும், தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான...
கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினார். நயினார் நாகேந்திரன் (பாஜக): கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டியிருந்தால்...