தவெகவின் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் – பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’
admin - 0
தமிழக அரசியலில் 2024 - 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தியின் எழுச்சியும், அதன் வெற்றியில் இன்ஸ்டாகிராம் ஆற்றிய பங்கும் அரசியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரிய அரசியல் கட்சிகள் மேடைப் பேச்சுகள், போஸ்டர் சண்டைகள், தெருமுனை கூட்டங்கள் என்ற பழைய பாணி பிரச்சார உத்திகளில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் 4 சுற்று...
புதுச்சேரியில் அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும் என்று மாநிலச் செயலர் அன்பழகன் உறுதிப்பட தெரிவித்தார்.
புதுச்சேரியில் உப்பளம் தொகுதியில் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் அன்பழகன் கூறியது: நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6வது முறையாகப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது.
அந்த ஆட்சியின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு எங்கள்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் நிலவரப்படி அதிமுக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 60 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், அமமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக...
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வருவதால் பிரதான கட்சி வேட்பாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதோடு, பிரதான கட்சிகளின் முகவர்களும் வாடிய முகத்துடன் காணப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தவெக வேட்பாளர்கள் 7 தொகுதியிலும் களமிறக்கப்பட்டனர்.
பிரதான...
தேர்தல் முடிவுகள் 2026: திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகளின் நிலவரம் என்ன?
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரி கட்சிகள் எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் நிலவரப்படி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா...
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவானின் திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள அரவான் சிரசுக்கு...
தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எவ்வித அசம்பாவிதம், மறு வாக்குப்பதிவும் இன்றி நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பதிவான வாக்குகள்...
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்
admin - 0
ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்ததால் கார் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் கமலநாதன் (36).
கடந்த 10 ஆண்டுகளாக திருவேற்காடு அடுத்த புளியம்பேடு நூம்பல் பகுதியில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வேலூரில் உள்ள அவரது சொந்த வீட்டு முகவரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், ‘கமலநாதன் ரூ.4.70...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இதுதொடர்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மதிவாணன் ஆகியோர் கூறியதாவது: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மாதம் தனலட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் இருந்த ஒரு...









