தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்​றுள்ள நடிகர் விஜய்​யின் தவெக கட்​சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்​லை. அதனால் முதல் கட்சியாக காங்​கிரஸ் ஆதரவு தெரி​வித்​துள்​ளது. கடந்த 2013ம் ஆண்டு இதே​போன்ற நிலை புதி​தாக தொடங்​கிய ஆம் ஆத்மி கட்​சிக்​கும் ஏற்​பட்​டது. அப்​போது டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்​கிரஸ் ஆதர​வளித்​தது. அதன்பின், காங்​கிரஸின் ஆதர​வுடன் அமைந்த கேஜ்ரி​வால் அரசு பெரும் பின்​னடைவு​களைச் சந்​தித்​தது. இப்​போது...
சட்​டப்​பேரவை தேர்​தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 70 எம்​எல்​ஏக்​கள், மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில், தங்​க வைக்​கப்​பட்​டுள்​ள​தால், அங்கு பாது​காப்பு பணிக்காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்கப்பட்டுள்​ளனர். தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 108...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக பல மாவட்​டங்​களில் அமோக வெற்​றி​பெற்​றாலும் கன்​னி​யாகுமரி, தென்​காசி, விழுப்​புரம் உட்பட 8 மாவட்​டங்​களில் ஓர் இடத்​தில்​கூட அக்​கட்சி வெற்றி பெற​வில்லை என்​பது வியப்​பாக இருக்​கிறது. நடந்து முடிந்​துள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய் தலை​மையி​லான தவெக தனித்​துப் போட்​டி​யிட்டு 108 இடங்​களை வென்​றுள்​ளது. திமுக​வின் கோட்டை எனக் கருதப்​படும் சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 தொகு​தி​களில் 14 தொகு​தி​களைக் கைப்​பற்​றி​யிருக்​கிறது. அதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர்...
​தி​முக, அதி​முக​வுக்கு இணை​யாக தவெகவின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தமிழகத்​தில் மாறி மாறி ஆட்​சிக்கு வந்த திமுக, அதி​முக​வுக்கு பெரும் பலமாக இருப்​பது வழக்​கறிஞர் அணி​கள். தேர்​தல் நேரத்​தில் வேட்​புமனு உள்​ளிட்ட ஆவணங்​களை முறை​யாக தயாரித்​துக் கொடுத்​தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதர​வான, எதி​ரான வழக்​கு​களில் உள்​ளூர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை சென்று வாதிட்டு வெற்​றியைத் தேடித் தருதல், எம்​.பி....
பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாக நாம் தமிழர் கட்சி செய​லாற்​றும் என்​று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறியிருப்பதாவது: அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் நாம் தமிழர் கட்​சிக்கு வாக்​களித்த அனை​வருக்​கும் என் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். வெற்​றி​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்​கும், பொறுப்​பேற்​க​வுள்ள விஜய் தலை​மையி​லான தமிழக வெற்​றிக்​கழக புதிய அரசுக்​கும் என்​னுடைய வாழ்த்​துகள். தமிழகம் எனும் தாய் நிலத்​தின் நலனுக்​காக​வும், உயர்​வுக்​காக​வும்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது. தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தத் தேர்தலில் தவெக போட்டியிட்ட 233 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக...
தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்தில் தற்​போது ‘தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், கட்​சிகளிடம்...
விஜய் அழைத்​தால் காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஆதரவு அளிக்​கு​மா? என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்​கர், பெ.சண்​முகம், மு.வீர​பாண்​டியன் ஆகியோர் பதிலளித்​துள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக அதிக தொகு​தி​களில் வெற்​றி​ பெற்​றுள்​ளது. இருப்​பினும், பெரும்​பான்​மைக்கு தேவை​யான இடங்​களை அக்கட்சி பெறாத​தால், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகளிடம் ஆதரவு அளிக்​கு​மாறு தவெக நாடி​யிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில், ஆட்​சி​யில் சேர தவெக தலை​வர் விஜய் அழைப்பு விடுத்​தால், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் ஆதரவு...
தமிழகத்​தில் 1967, 77 தேர்​தலைப்​போல 2026 தேர்​தலும் புரட்​சிக்கு வழி​வகுத்​துள்​ளது. இதை, தவெக தலை​வர் முன்பே கணித்து கூறியது குறிப்​பிடத்​தக்​கது. தவெக​வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் கடந்த பிப்​ர​வரி மாதம் நடை​பெற்​றது. அப்​போது பேசிய தவெக தலை​வர் விஜய், “1967, 1977 சட்​டப்​பேரவை தேர்​தல்​களைப் போல 2026 சட்​டப்​பேரவை தேர்​தலும் தமிழகத்​தில் புரட்​சிக்கு வழி​வகுக்​கும்” எனத் தெரி​வித்​தார். இவர் கணித்​தது போல், இன்​றைய...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்​றுள்ள தவெக தலை​வர் விஜய்க்கு திரை​யுல​கினர் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: சூர்​யா: மக்​களின் அன்​பை​யும், ஆதர​வை​யும் பெறு​வது ஒரு வரம். நண்​பர் விஜய் மீது தமிழகம் மிகுந்த நம்​பிக்கை வைத்​துள்​ளது. தமிழக அரசி​யலில் புதிய அத்​தி​யா​யம் தொடங்​க​விருக்​கும் அவருக்கு எனது வாழ்த்​துகள். சிவ​கார்த்​தி​கேயன்: தனது முதல் தேர்​தல் களத்​திலேயே இவ்​வளவு பெரிய வெற்​றியை பெற்ற விஜய் சாருக்கு பாராட்​டு​கள். நீங்​கள் திரை​யுல​கத்​தைச் சேர்ந்​தவர் என்​பது கூடு​தல் மகிழ்ச்​சி. ரவி...