உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு குறித்து டிசம்பருக்குள் தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்
admin - 0
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு தொடர்பான பரிந்துரை டிசம்பர் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துதல் தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் அரும்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
ஆணையத்தின் தலைவர் கே.அலாவுதீன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், நகராட்சி...
முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் (79), உடல்நலக் குறைவால் நேற்று சிவகங்கையில் காலமானார்.
சிவகங்கை அருகே ஏரியூரைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன். இவர் 1999 – 2004-ல் சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2004 – 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும், 2013 - 2014-ல் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவி...
கடந்த திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர பணம் வசூலித்ததாக 177 பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 16-ம் தேதி சோதனை நடத்தினர். 18-ம் தேதி (இன்று) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (செப்டம்பர் 19) நடைபெறவுள்ளது.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு முப்பெரும் விழாவை சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னோடிகளுக்கு விருது
இதில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு...
திட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதால், தவெகவை ‘தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்வை செப்.17 முதல் அக்.17 வரை கொண்டாட இருக்கிறோம். இதற்காக ரத்த...
மூலவைகை உருவாகும் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது. இப்பிரச்சினையை சரிசெய்ய கோரி வருசநாடு அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி வட்டம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூலவைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆறு வறண்டதால் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து...
பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸ் வீடுகள் உட்பட 9 இடத்தில் சோதனை
admin - 0
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வசூலித்தது தொடர்பான புகாரில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீடுகள் உட்பட 9 இடங்களில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் 2021-26-ல் நடைபெற்ற திமுக ஆட்சியின் போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, டிடிசிபி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதி களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம்...
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இன்னும் 2 அல்லது 3 நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
இதன்காரணமாக ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. முப்பெரும் விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச்...
பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தல்
admin - 0
வடகிழக்கு பருவமழைக்கு முன்பு சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க, அனைத்து கோட்ட பொறியாளர்களுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ், மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என 70 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் உள்ளன. இதில், மாவட்ட இதர சாலைகள் மட்டுமே 45 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உள்ளன.
இச்சாலைகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் தமிழகம் முழுவதும் 68 இடங்களில்...
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது
admin - 0
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவுபெற்றன. தொடர்ந்து வேட்பாளர்களின் மனுக்கள் இன்று (செப்.17) பரிசீலனை செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்யபாமா ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அதன்பின் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தனர்....









