Google search engine
எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின் எண்​ணம் என்​றும் விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார். எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் சென்​னை,​எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடைபெற்றது. அப்போது விசிக தலைவர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: பாஜக உள்​நோக்​கத்​துடன் தான் எஸ்​ஐஆரை கையாள்​கிறது. பாஜக அரசு அரசி​யல் கட்​சிகளுக்கு நெருக்​கடியை ஏற்​படுத்தி உள்​ளது....
“நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒன்றுமே புரியவில்லை,” என்று எஸ்ஐஆரை பற்றி ஆட்சியரிடம் புகார் மேல் புகார் வாசித்துவிட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தியாளர்களிடம் தனது அதிருப்தியை கொட்டித் தீர்த்தார். மதுரை மேற்கு தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடப்பதாகவும், விண்ணப்பங்களை முழுமையாக தொகுதி மக்களுக்கு வழங்காமல் 100 சதவீதம் கொடுத்ததாக போலி கணக்கு காட்டப்படுவதாக நேற்று செல்லூர் ராஜூ, ஆட்சியர் பிரவீன்குமாரை...
பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி...
“ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி நிச்சயம்” என்று 1967-ல் அண்ணா சொன்னார். 1967 தேர்தலில் நடந்த மாற்றம் இந்தத் தேர்தலிலும் நடக்கப் போகிறது என்று சொல்லும் விஜய், “எல்லோருக்கும் நிரந்தரமான ஒரு வீடு... வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், கார் என்பது லட்சியம்... அதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கு வோம்” என்று அண்ணாவின் பூமியில் நின்று முழங்கியிருக்கிறார். இதன் மூலம்...
திமுக இளைஞரணியின் திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில்,தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். 1.50 கோடி தேர்தல் நிதி: அப்போது அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், தேர்தல் நிதியாக ரூ.1.50 கோடிக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். தொடர்ந்து, இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இங்கு, 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.தனபால் தமிழக சட்டப்பேரவை தலைவரானார். அதேபோல், 2016-ல் இங்கு வென்ற அதிமுக வேட்பாளர் வி.சரோஜா சமூகநலத்துறைக்கு அமைச்சரானார். அடுத்ததாக, 2021-ல் இங்கு வெற்றிபெற்ற திமுக-வின் மா.மதிவேந்தன், இப்போது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். ராசிபுரத்துக்கு இப்படியொரு ‘ராசி’ இருப்பதால் இம்முறை இங்கு போட்டியிட இரண்டு முக்கிய கூட்டணியிலும்...
 சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி...
எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும்...
குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 4 ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்​றோர் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, அரசுத் துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் 4 லட்​சத்​துக்​கும் மேல் உயர்ந்​துள்​ளது. அது​மட்​டுமின்றி இளைஞர்​கள் பலரும் அரசுப் பணி​யில் சேர முயன்று வரு​வ​தால் போட்​டித்...
‘முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி​யில் மேகே​தாட்டு அணை​யால் தமிழகத்​துக்​குப் பாதிப்பு இல்லை என்று கர்​நாடக முதல்​வர் கூறி​யிருப்​பது கேலிக்​கூத்​தாக உள்​ளது. கர்​நாடக முதல்​வரின் கருத்து தமிழகத்​தைப் பாலை​வன​மாக்க வழி​வகுக்​கும். இதன்​மூலம், உபரி நீரை​யும் தமிழகத்​துக்கு தரக்​கூ​டாது என்ற கர்​நாடக அரசின் தீய எண்​ணம் வெளிப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேகே​தாட்டு அணையை கர்​நாடக அரசு கட்​டி​னால், தமிழகத்​துக்கு வரும் உபரி நீரும் நின்​று​விடும். இந்​தத் திட்​டம் கர்​நாடகத்​துக்கு மட்​டும்​தான் பயனளிக்​கும்....