தந்தையும் மகனும் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் டிச.17-ம் தேதி நடைபெறும் பாமக ஆர்ப்பாட்டத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி.கே.மணி பேட்டி கொடுக்க வேண்டிய தேவையும், அவசியமும் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.
பாமகவும், கட்சியின்...
மாநகராட்சி பகுதியில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களை கண்டு பிடிக்க மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். போதிய பாதுகாப்பு அளிக்காததால் ஆய்வுக்கு செல்லும் அலுவலர்கள், வீட்டு உரிமையாளர்களால் விரட்டப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
சென்னை மாநகரில் பொதுமக்கள், குழந்தைகளுக்கு வளர்ப்பு நாய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. மூர்க்க குணம் கொண்ட நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள், பராமரிப்பு செலவு அதிகரிக்கும்போது, அவற்றை சாலையில் விட்டுவிடுகின்றனர்.
இதை தடுக்க, வளர்ப்பு...
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்த மோசமான வானிலையால், டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. அந்த விமானங்கள், சென்னை வந்துவிட்டு, சென்னையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் செல்ல இருப்பதால், அந்த சேவையும் தாமதம் ஆகின்றன.
நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, டெல்லியில் இருந்து சென்னை...
ஜனவரியில் தமிழக அரசியலை தெறிக்கவிடப் போவதாக அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டின் தலைவராக ஆக்ஷன் ஹீரோ கட்சியை முன்னேற்ற வந்துள்ளார். இதில் முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் இரண்டு முக்கிய தலைகளை தூக்கிக் கொண்டு வந்து நிப்பாட்டுவதாக தலைவருக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறாராம்.
அந்த வகையில், அண்மைக் காலமாக ஆலயக் கட்சிக்கு பிரவேசம் செய்யப்போகிறார் என செய்திகள் வருவதும் அடங்குவதுமாக இருக்கும் முன்னாள் ‘ஷாக்’ மாண்புமிகுவின் மனதை பல...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஞானசேகர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர்...
நியாயவிலை கடை தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
admin - 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழகத்தின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று வாக்குறுதி எண் 238-ல் “சுகாதாரத்தையும், எடையையும் உறுதிப்படுத்தும் வகையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் எல்லாப் பொருட்களும் பாக்கெட்களில் வழங்க ஆவன செய்யப்படும்” என்று...
வேளாண்மையை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் விதை சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய விதை சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றை மாற்றி, நாடு முழுவதும் விவசாயிகளுக்கு விற்கப்படும் அனைத்து விதைகளின் தரம், உற்பத்தி, விற்பனையை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில், விதை சட்ட...
கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் டெண்டருக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
admin - 0
தமிழகம் முழுவதும் கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, அந்த நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தமிழகத்திலும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தகுதியிழந்த நிறுவனம்: அதன்படி,...
எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
admin - 0
தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
இவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது. திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களின் பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி விரிவாக விளக்கினார்.
திருத்தப் பணிகள் துல்லியமாகவும்...
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் உள்ள பிரச்சினைகளைக்களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்...
