முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் குற்றவாளிகளை சரியாக...
மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதியார் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவச் சிலைக்கு தமிழக ஆளுநர்...
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் வைத்திருந்த வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தது எப்படி? – போலீஸ் விசாரணைக்கு உத்தரவு
admin - 0
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்து தனியாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த...
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பம் குறித்து பேரவையில் தவறான தகவல்: மருத்துவர்கள் எதிர்ப்பு
admin - 0
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பம் குறித்து தவறான தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்ததற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு, தன் குழந்தைகளுடன் சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து கோரிக்கை...
இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்ய வேண்டும்: தொழிலாளர் துறை செயலர்
admin - 0
இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்யும்படி, தொழிலாளர் துறை செயலர் வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையரகத்தில் நேற்று தொழிலாளர் நலத் துறை செயலர் கொ.வீரராகவராவ் தலைமையில், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலையில், துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய துறையின் செயலர் வீரராகவராவ், ``தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ்...
நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் சட்டரீதியாக உரிமை கோர முடியாது: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் அந்த நிலத்துக்கு சட்டரீதியாக உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி கட்டுமான கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டு, பாலவாக்கம் திருவள்ளுவர் நகரில் 24 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
இந்நிலையில், இதில் 4.47 ஏக்கர் நிலத்தை 250 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றனர். இந்த...
மாணவர்கள் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களா? – ஆசிரியர்கள் கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை வலியுறுத்தல்
admin - 0
மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
துறையின் ஆணையர் ஆர்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.
நல்வழி கூறவேண்டும்: இதில்,...
அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகள் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.
இவற்றின் விற்பனையை மேம்படுத்த, சென்னையில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்கள், விற்பனை நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தயிரில் புரதம் அதிகமாக இருக்கும். குழந்தைகள், வயதானவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள்...
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய வீடுகள்; உயிரிழப்பை ஏற்படுத்தியும் இடிக்க அனுமதிக்காத மக்கள் – கணக்கெடுப்பு தொடங்கியது
admin - 0
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அங்கு தரை மற்றும் முதல் தளம், தரை மற்றும் 3 தளம், தரை மற்றும் 4 தளம் என 3 வகையாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சிதலமடைந்த நிலையில் உள்ளன....
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 7 புறப்பாடு, 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கொச்சி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.50 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ்...









