Google search engine
தொழிலாளர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனர். இதுதொடர்பான 3-ம் கட்ட சமரசப்...
தமிழகத்தில் அரசு திட்டங்களின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்கக் கூடாது என பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அரசு திட்டங்களுக்கான பணிகளை செய்யும் சில ஒப்பந்ததாரர்கள் தற்காலிக மின்இணைப்புக்கான மின்கட்டணத்தை மாதம்தோறும் சரிவர செலுத்துவது இல்லை. மேலும், அரசு பணி என்பதால் அந்த மின்இணைப்புகளில் மின்விநியோகத்தை அதிகாரிகள் துண்டிப்பது இல்லை. தற்காலிக இணைப்புக்கு செலுத்திய டெபாசிட் தொகையை விட மின்கட்டணம் அதிகம் இருக்கும்பட்சத்தில், பணிகளை முடித்து விட்டு...
“தமிழக மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தொடங்கிவைத்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி வளர்ச்சி நாளான இன்று (ஜூலை 15) தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி...
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக 84 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 1.45 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 1,513 வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட 8...
தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த காமராசரின் 122-ஆம் பிறந்த நாளில் உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான். தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் மனோகரன் அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியபோது, உதவிப்பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாகக்கூறி, அவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெமோ வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,...
தமிழகத்தில் தற்போதைக்கு அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாகவாங்கப்பட்டுள்ள பேருந்துகளில், ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப்போல செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்டோர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில்...
எல்லோரையும் மிரட்டுவதுபோல வழக்கு என சொல்லி என்னையும்மிரட்ட முடியாது என்று அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு விவரம்: எல்லா வழக்குகளையும் பார்த்தவன். மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எல்லோரையும் மிரட்டுவதுபோல என்னையும் அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எனது வழக்கின்தன்மை பற்றி அவருக்கு தெரியவில்லை. எங்கள் மீது வழக்கு பதிவு செய்தபோது ‘நீங்கள்...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது,நாதக வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், பட்டியலின மக்கள் குறித்தும் சாட்டைமுருகன் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, திருச்சிமாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் புகார் அளித்திருந்தார். இதன் பேரில், சாட்டை துரைமுருகன் மீது திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் 5...
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளிலிருந்து, கடந்த 9-ஆம் தேதி மீனவர்கள் 176 விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை வரை மீன் பிடித்து விட்டு, கரை திரும்பியுள்ளனர். நெடுந்தீவு அருகே வந்து...