Google search engine
 ‘நீ​தித் துறை​யில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடி​யாது; அதே​போல நீதிப​தி​களை புனிதர்​களாகச் சித்​தரிக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை’ என்று கருப்பு படத்​துக்கு தடை கோரிய வழக்கை தள்​ளு​படி செய்​து, சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். ‘நடிகரும், இயக்​குநரு​மான ஆர்​.ஜே.​பாலாஜி இயக்​கத்​தில் நடிகர் சூர்​யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்​தில் வெளிவந்​துள்ள ‘கருப்​பு’ திரைப்​படத்​தில் நீதித் ​துறையை​யும், நீதிப​தி​களை​யும் அவம​திக்​கும் வகை​யில் காட்​சிகள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​படத்​துக்கு தடை...
டெல்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் நேற்று சென்னை திரும்​பினார். முன்​ன​தாக திட்​டமிடப்பட்ட சோனி​யா, ராகுல் சந்​திப்பு ரத்து செய்யப்​பட்​டதால் அரசி​யலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது. நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆட்சி அமைக்க பெரும்​பான்மை கிடைக்​காத​தால் காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இப்​படி​யான அரசி​யல்...
இளைஞர்​கள் செல்​போனை ஒதுக்கி வைத்​து​விட்டு புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த புத்தக வெளி​யீட்டு விழா​வில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறி​வுறுத்​தி​னார். மெட்​ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசி​யேஷன் மற்​றும் கொன்​ராட் அதெ​னாவர் அறக்​கட்​டளை சார்​பில் வங்​கி​யாள​ரும், பிரபல எழுத்​தாள​ரு​மான ஷியாம் னி​வாசன் எழு​திய ‘பெட்​டர் நெவர் ஸ்டாப்​ஸ்’ புத்தக வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கபில் தேவ், புத்​தகத்தை வெளி​யிட்​டார்....
கோடை வெப்​பத்​தால் ஏற்​படும் நோய்​களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்​தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்​பம் அதி​கரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளி​யேறும்​போது உடலில் உப்​புச்​சத்து மற்​றும் நீர்ச்​சத்து பற்​றாக்​குறை ஏற்​படு​கிறது. இதனால் அதிக தாகம், தலை​வலி, உடல்​சோர்​வு, தலைசுற்​றல், தசைப்​பிடிப்​பு, குறைந்த அளவு சிறுநீர்...
“இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம்” என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தனி சின்னத்தில் வென்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் மமக இந்த முடிவுக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த ஜவாஹிருல்லா, “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அதன் பதிவை தக்கவைத்துக் கொள்ள முடியும்...
பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி வருமாறு: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்: இந்த தியாக திருநாள் பகிர்வு, பரிவு, ஒற்றுமை மற்றும் சமரசம் ஆகிய மனப்பான்மைகளை ஏற்கத் தூண்டி, நமது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கும்...
தமிழகம் முழு​வதும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனு​ம​திக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை மாவட்​டம் செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், `பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு கடந்​தாண்டு கோவை செல்​வபுரத்​தில் மாடு​கள் வெட்ட தனி​யாக தகர கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இதுதொடர்​பாக புகார் அளித்​த​தால்...
திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனத்​துக்கு வந்த ஆந்​தி​ராவைச் சேர்ந்த இளம்​பெண்ணை போலீ​ஸார் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலைக்​குள் விசா​ரி்த்து முடிக்க வேண்​டுமென மகளிர் நீதி​மன்​றத்​துக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். ஆந்​திர மாநிலம் காளஹஸ்​தி​யில் இருந்து கடந்​தாண்டு செப்​டம்​பர் மாதம் தனது வளர்ப்​புத் தாயார் மற்​றும் மாமாவுடன் சரக்கு வாக​னத்​தில் திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்​பெண்ணை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக திரு​வண்​ணா​மலை கிழக்கு...
தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்​ளு​படி செய்​திருக்​கிறது தவெக அரசு. ஆனால், தேர்​தல் வாக்​குறு​தி​யில் சொன்​னபடி விஜய் செய்​ய​வில்​லையே என விவ​சா​யிகளும் விவ​சாய சங்​கங்​களும் போர்க்​கொடி தூக்கி இருக்​கின்​றன. பயிர்க் கடன் தள்​ளு​படி என்​பது திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் ஓட்டுக்​காக விவ​சா​யிகளை வளைக்​கும் ஒரு உத்​தி. அதேசம​யம், இந்த ‘தள்​ளு​படி’ விவ​காரத்​துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவ​சா​யிகளுக்கு கடன் வழங்​கும்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில், அவரது இல்லத்துக்​கு, முன்​னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊர்​வல​மாக சீர்வரிசை எடுத்து வந்து வழங்​கி​னார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் - கயல்விழி தம்​ப​தி​யினருக்​கு, முதலா​வ​தாக ஆண் குழந்தை இருக்கும் நிலை​யில், அவர்​களுக்கு இரண்​டாவ​தாக, பெண் குழந்தை கடந்த 22-ம் தேதி பிறந்​தது. இந்​நிலை​யில், நீலாங்​கரை​யில் உள்ள சீமானின் இல்​லத்​துக்கு நாதஸ்​வரம், மேள தாளங்​கள்...