Google search engine
மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு 8 முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக உள்ளது. அதேபோல், ‘கால் டியூட்டி’ என்ற அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும் பணிக்கு வருவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்ததைவிட,...
வரும் கோடைக்காலத்தில் சீரான மின்விநியோகம் செய்வதற்காக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் வ.உ.சி. படத்துக்கு மலர்...
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்...
டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு, 10 சிறப்பு விரைவு ரயில்களின் சேவை காலத்தை நீட்டிக்க தெற்கு ரயில்வேயின் போக்குவரத்து பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அந்த ரயில்கள் விவரம்: ஞாயிறுதோறும் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் (06012) டிசம்பர் 1 முதல் 2025 பிப்ரவரி 2 வரை 10...
எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, சிலம்பு உட்பட 3 விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மூன்று ரயில்களின் சேவையில் தற்காலிமாக மாற்றம் செய்யப்பட்டு, மறுஉத்தரவு வரும் வரை...
நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை...
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழ்வேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேரின் நூல் களை நாட்டுடைமையாக்கி. அவர்களின் வாரிசுகளுக்கு நூல் உரிமைத் தொகையான ரூ.90 லட்சத்தை தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங் கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச் சியில், தமிழறிஞர்கள் ஆறு. அழகப்பன் மற்றும் ராமலிங்கம் என்ற எழில் முதல்வன் ஆகியோருக்கு சிறப்பு நேர்வாக வாழுங்காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும்,...
கடற்கரை - தாம்பரம் இடையே நேற்று காலை முதல் மாலை வரை மின்சார ரயில் ரத்தால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதற்கு மாற்றாக, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் நேற்று பராமரிப்பு பணி...
விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏவின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி புரவலர் சைதை எம்.எஸ்.மணி - எஸ்.கன்னிகா பேரனும், விசிக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எம்ஏவின் மகனுமான மருத்துவர் பா.கவுதம் - மருத்துவர் இரா.கீர்த்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக,...