Google search engine
ஏக​னாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்​தினம் தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக இவர் 9 முறை தீர்​மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்​பிட்​டத்​தக்​கது. சென்னை​யின் 2-வது விமான நிலையம் காஞ்​சிபுரம் அருகே​உள்ள பரந்​தூரில் அமைகிறது. இதற்காக பரந்​தூர் மற்றும் சுற்றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்​படுத்​தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழு​மையாக கையகப்​படுத்​தப்பட உள்ளன. இதனால்...
கிண்டி கலைஞர் மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர், புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் பாலாஜியை கழுத்து, தலை, நெற்றி என 7 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில்...
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 107-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப் படத்துக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 107-வது பிறந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சத்தி​யமூர்த்தி...
சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று (நவ.20) முதல் 23-ம் தேதி வரை முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45,...
சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு பாலிஹோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் விமானங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரப்பர் மற்றும் பைப் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், கடந்த 2023-24-ம் நிதியாண்டில் தங்களது வருமானத்தை குறைத்து காட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அந்நிறுவனம் வரிஏய்ப்பு செய்ததற்கான முகாந்திரம் இருந்ததைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து,...
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு அஸ்திவாரத் தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல்...
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ.3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில்,...
இந்தாண்​டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்​கக்​கூடாது என தடை விதித்​துள்ள உயர் நீதி​மன்​றம், எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பெயரைப் பயன்​படுத்​தாமல் அவருக்கு விருது வழங்​கலாம் எனவும் உத்தர​விட்​டுள்​ளது. மறைந்த கர்நாடக இசை பாடகியான எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்​திருந்த சிவில் வழக்​கில், “கடந்த 2004-ம் ஆண்டு எனது பாட்​டி​யின் மறைவுக்​குப்​பிறகு மியூசிக் அகாடமி அவரது நினை​வைப் போற்றி கவுரவிக்​கும் வகையில்...
நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்‌ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி சுவாமிநாதன். இவர், சக்‌ஷம் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு) என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராக உள்ளார். இவர் விடுத்துள்ள அறிக்கை:...
மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு திட்​டங்​களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்​துரை செய்ய வேண்​டும். மத்திய வருவா​யில் மாநிலங்​களுக்கான வரிப் பகிர்​வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்​டும் என்று 16-வது நிதி ஆணைய குழு​விடம் முதல்வர் ஸ்டா​லின் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் 16-வது நிதி ஆணையத்​தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமை​யில், அதன் உறுப்​பினர்கள் அடங்கிய குழு​வினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர்....