சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்ணும் தீயணைப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் பெய்தமழையில் மாநிலம் முழுவதும் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புகட்டுப்பாட்டு அறைக்கு, பாம்புகளை பிடிக்க வேண்டும் என்றவகையில் மட்டும் 211 அழைப்புகள்...
சென்னையில் கனமழை பெய்தபோதிலும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை: ஆவின் மேலாண்மை இயக்குநர் தகவல்
admin - 0
சென்னை: கனமழை பெய்தபோதிலும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக,...
கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன் சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அவதி: விரைவில் தீர்வு காண கோரிக்கை
admin - 0
சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள சாலைகளில் சிறு மழைக்கே தண்ணீர் தேங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி எஸ்டேட் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுமழை பெய்தாலே அப்பகுதி களில் உள்ள பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கிவிடுகிறது.
வடிகால்களால் பயனில்லை: பல மணி நேரத்துக்கு பிறகேமழைநீர் வடிகிறது. இப்பகுதி களில் மழை நீர் வடிகால்கள் புதிது...
காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சிஐடியு தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர். சிஐடியு நிர்வாகிகள்...
இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதல் பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ – காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கடலில் செலுத்தப்பட்டது
admin - 0
சென்னை: இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது பன்னோக்கு கப்பல் ‘சமர்த்தக்’ சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கடலில் செலுத்தப்பட்டது.
இந்திய கடற்படைக்காக எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனம் கட்டிய முதலாவது பன்னோக்கு கப்பல் இதுவாகும். இதுபோல 2 கப்பல்கள் கட்ட எல் அண்டு டி நிறுவனத்துடன் கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் இது முதலாவது கப்பலாகும். இக்கப்பலை கடற்படை மரபுகளின்படி, கடற்படை தளபதியின் மனைவியும், கடற்படை மனைவியர்...
‘நான் உங்களுக்கு உதவலாமா?’ – அறிவிப்பு பலகை வைத்து மக்களுக்கு உதவ வேண்டும்: பொது சுகாதார துறை உத்தரவு
admin - 0
சென்னை: அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ‘நான் உங்களுக்குஉதவலாமா?’ என்ற அறிவிப்புபலகையை வைத்து, வழிக்காட்டுநரை நியமிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 13,527 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சேவை, கர்ப்பகால முன்கவனிப்பு, பிரசவம், தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிறவி குறைபாடு, ஊட்டசத்து பற்றாக்குறை...
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டருக்கு விண்ணப்பித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழக அரசு, தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரியும் சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது....
டிஎன்பிஎஸ்சி மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்து நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் காணொலியில் ஆஜரான மூத்தவழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பானவீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்ற...
சென்னை: சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜக்கான் முதல் தெரு, முசிறி சுப்பிரமணியன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அப்பணியில் ஈடுபட்ட...
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
admin - 0
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்களை மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018-ல் வழக்கு தொடர்ந்தார். இதில் சட்டக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்...










