மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதியில் இருந்து ஒருவாரமாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை...
கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பின் தலைவராக சூசன் ஜேக்கப் தேர்வு
admin - 0
கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பில் (ஐஎஸ்ஆர்எஸ்) உலகம் முழுவதும் 90 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஆர்எஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் அகர்வால்ஸ் மருத்துவ குழுமத்தின் தலைவர் மருத்துவர் அமர் அகர்வால் ஏற்கெனவே இருந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது இந்த கவுரவம், மருத்துவர்...
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 342 மையங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
admin - 0
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 342 மையங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்று விப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’, 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா...
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில், சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை 3 வயதில் செய்து கொண்ட, முதுகலை பட்டப் படிப்பு படித்து வரும்...
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜனவரி 3-ம் தேதி அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்தின் போது, தமிழக அரசு அறிவித்த புதிய அறிவிப்புகளில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடைத் தொகை ரூ.5...
‘கருத்துச் சொல்லலாம் வாங்க’ என கட்சியினரை கரிசனத்துடன் தலைநகருக்கு அழைத்திருந்தது கதர் கட்சி. அதுசமயம், மக்கள் பிரதிநிதிகளிடம் தனித்தனியே கருத்துக் கேட்டாராம் இளம் தலைவர். ‘சீமை’ மாவட்டத்திலிருந்து ‘சிறப்பான’ ஏற்பாட்டுடன் போயிருந்த மக்கள் பிரநிதி ஒருவர். “சூரியக் கட்சியுடன் இருப்பது தான் நமக்குப் பாதுகாப்பு” என்று தன்னை உருவாக்கிவிட்ட தலைவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தாராம்.
அவரை கிராஸ் செக் செய்த இளம் தலைவர், “அப்படியா... உங்க அசெம்ளி தொகுதியில் உள்ளாட்சி...
இணையவழி கல்வி மாணவர்களை சென்றடைய கிராமப்புற தபால் நிலையங்களில் ஸ்மார்ட் டிவிக்கள்: சென்னை ஐஐடி இயக்குநர் வேண்டுகோள்
admin - 0
கல்வி நிறுவன வளாகங்களில் இருக்கும் தபால் நிலையங்களை அஞ்சல் துறை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில், சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள துணை தபால் நிலையம் அடுத்த தலைமுறையினரின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, ‘என்-ஜென்’ (நியூ ஜெனரேஷன்) தபால் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இளம் பயனாளர்கள் எளிதில் அணுகும் வகையில் ஏ.சி. இலவச வைஃபை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், சார்ஜிங் போர்ட் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தபால் நிலையத்தை ஐஐடி...
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
admin - 0
பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 4 நாட்கள் பொங்கல் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்ததால், நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் நேற்று முன்தினம் மதியம்...
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்கீழ், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்துவதற்கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதனால், வார விடுமுறை நாட்களாக 24, 25 தேதிகளில் சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 18...
இந்தியாவின் பதிப்பக தலைநகராக சென்னை உயர்ந்துள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், 49-வது சென்னை புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பபாசி விருதுகள் வழங்கும் விழா, புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி...
