கோவையில் விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்: முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு
admin - 0
கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த கிருஷ்ணவேணி (வயது 51) க/ப.சக்திவேல் என்பவர் நேற்று (31.10.2024) மாலை அங்கலக்குறிச்சியிலுள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வால்பாறை அனைத்து...
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவ.1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்...
சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 16 தொகுதிகளில் 39,25,144 வாக்காளர்கள் – ஆண்களைவிட பெண்கள் அதிகம்
admin - 0
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர் என்று வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 68,704 பேர் அதிகமாக இருக்கின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 2025-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி துணை ஆணையாளருமான (வருவாய்...
தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்களை ரூ.120 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு: இயக்குநர் தகவல்
admin - 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள்...
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.55 லட்சம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
admin - 0
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.31.95 லட்சத்துக்கான காசோலைகள், ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம் ரூ.40 லட்சத்து 55 ஆயிரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனாவில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 4-வது உலக ஜூனியர் சாப்ட்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு கைது செய்தனர்.
பின்னர் அவர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில்...
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 6 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
admin - 0
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, இன்று (அக்.30) மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. அதாவது, புதன்கிழமை காலை 5...
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக இன்று கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத பலர், விமானங்களில் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.
அலைமோதும் பயணிகள்: இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி,...










