Google search engine
பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக காவல்துறையின் அலட்சியப்போக்கு காரணமாக, சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ராஜன் உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் கூறுவது வேறு விதமாக உள்ளது. அதாவது, கடந்த மாத...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைப்பது மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்துக்காக விரயம் செய்வதாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடியில் ‘கருணாநிதி பன்னாட்டு அரங்கம்’ அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க...
“கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக அரசு முன் வரவேண்டும்.” என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவான குடும்பத்தின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், பிறப்புகளுக்கிடையே போதிய இடைவெளி, திருமண வயதை உயர்த்துதல், இளவயது கர்ப்பம் ஆகியவை...
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா நகர் சிறுமி வாக்குமூலம் அளித்த வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை...
யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.வி.செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றாக நின்று பேராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து...
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்ற 309-வது வாக்குறுதி, 70 வயது முடிந்ததும் 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற 308-வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீண்டநாட்களாக...
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் இணைய கட்டமைப்பு வசதியுள்ள தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதில், காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது...
டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மத்திய சுரங்கத்துறை அமைச்சரை சந்திக்கும் வகையில் அரிட்டாபட்டி விவசாயிகளை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் விவகாரத்தில் புதன்கிழமை (இன்று) மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும். தொடக்கத்தில் இருந்தே இதற்கு தீர்வு வழங்கவே...
தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் வந்தது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், இவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்ற கைதி பிரகாஷ் ஆகியோர் சிறையில் அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க...