Google search engine
குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர். நாடு முழுவதும் 76-வது குடியரசு தின விழா ஜன.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் குடியரசு தின விழா மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழக ஆளுநர், முதல்வர் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்கெனவே, 2023-ம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் கடந்த...
சென்னையில் தனியார் மினி பேருந்து இயக்குவது, போக்குவரத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கை என அதிமுக, பாமக கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை யில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை பிப்ரவரியில் ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், மாவட்ட தலைவர்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பெற விருப்பம் உள்ளவர்கள், இணைய வழியில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று செல்வப்​பெருந்தகை அண்மையில் அறிவித்​தார். இதற்குத்தான் மாவட்ட தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்​துள்ளது. ஈவிகேஎஸ் மற்றும் மன்மோகன் சிங் படத்திறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது....
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள். ‘ஆசிரியர் மனசு’ திட்டத்​திற்காக திருச்​சியில் தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கி வைத்த அமைச்சர் மகேஸ், திட்டத்தின் மாநில ஒருங்​கிணைப்பாளராக இடைநிலை ஆசிரியரான ‘சிகரம்’ சதீஷ் என்பவரை நியமித்​தார். இவரை மையப்​படுத்​தித்தான் இப்போது சர்ச்​சைகளும் வெடித்துள்ளன. செல்வாக்கு, பணம்...
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துக்கு மக்களின் எழுச்சிமிக்க போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவ.19-ல் அறிக்கை வெளியிட்டேன். நவ.21-ல் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன், டிச.3-ல் நாடாளுமன்றத்தில் பேசினேன். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து...
திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை கட்டுப் பாட்டிலுள்ள குகைகளை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகை கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கான தற்காலிக பராமரிப்பு பணியாளரான ராஜன் என்பவர் குகை கோயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகைகளில் அடையாளம் தெரியாத சில...
எதிர்கட்சிகள் புறக்கணிப்பால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை இழந்து காணப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சீமான் பரப்புரையைத் தொடங்க உள்ளதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில்,...
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட நவாஸ் கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தனது கட்சியினருடன் சென்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவாஸ் கனி எம்.பி. இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி...
கொடைக்கானல் அருகே கே.சி.பட்டியில் விவசாயியிடம் மின் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்து மாறு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான கே.சி.பட்டியில் விவசாயமே பிரதான தொழிலாகும். இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாவே இப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த அளவு மின்சாரம் பயன் படுத்தினாலும், மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வருவதாக பொது...
தமிழகத்தில் மலை பிரதேசமான குன்னூரில் மிக குறைந்தபட்சமாக 8.4 டிகிரி செல்சியஸ், நில பகுதியான கரூர் பரமத்தியில் 15.5 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை...