கரோனா பேரிடரில் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு அரசு வேலை: சட்ட போராட்டக்குழு வலியுறுத்தல்
admin - 0
கரோனா பேரிடரின்போது பணியாற்றி தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் முந்தைய அரசை வலியுறுத்தினார். ஆனால்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை...
அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: வாக்குமூலம் வெளியானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு மாற்றம்
admin - 0
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை போலீஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.
சிறப்பு...
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனுதாரர் தரப்பு மார்ச் 10-ம் தேதிக்குள் பதில் அளி்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பரில் புகார் எழுந்தது. இதுகுறித்து...
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின்கணக்கீட்டு முறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் நடந்த அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதில் வரும் கோடைகாலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இதுவரை 48 துணை மின்நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன....
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாகிறார் என்றும் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள், பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில்...
அதற்குப் பயந்தே அமைச்சர்கள் இந்தப் பக்கம் வரமாட்டார்கள்! – நறுக்கென பேசும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி
admin - 0
முக்கிய எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது. தெருவுக்குத் தெரு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பணம், பரிசுப்பொருள் என கடந்த 2023-ல் கண்ட திருவிழா கோலம் இப்போது இல்லை. இந்த நிலையில் திமுகவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியிடம் பேசினோம்.
கடந்த இடைத்தேர்தலில் பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் பெருமளவில் நடந்தது. இம்முறையும் வாக்காளர்களிடம் அது போன்ற எதிர்பார்ப்பு உள்ளதா? - தங்கள்...
யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? – வேங்கைவயல் குற்றப்பத்திரிகை விவகாரத்தில் பா.ரஞ்சித் ஆதங்கம்
admin - 0
கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சிபிசிஐடி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி நேற்று (ஜன.24) சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்...
கிராமப்புறங்களில் வீடு தேடி அறுவை சிகிச்சை அளிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (ஐஆர்ஐஏ) சார்பில் 23-வது ‘கதிரியக்க ஆசிய மாநாடு’ மற்றும் 77-வது ஆண்டு கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்த மாநாடு...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ம் தேதி) நடைபெற உள்ளது. இப்போட்டியை பார்க்க வரும் பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன்...










