Google search engine
வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வி.ஐ.டி சென்னை மாணவர்களிடையே கடந்த ஜன. 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கபடி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் ஏராளமான...
சென்னை: “மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று புதுச்சேரியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடத்தையும்,...
பொங்கல் பண்டிகை​யின்​போது மக்கள் பொங்கல் வைக்​கும் பானை​யில் கட்டப்​படும் மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலை​யில், இந்த ஆண்டு லாபகரமான விலை கிடைக்​கும் என்ற நம்பிக்கை​யில் விவசா​யிகள் உள்ளனர். அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை​யின்​போது, பொங்கல் வைக்​கும் பானை​யில் மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்​படு​கிறது. மஞ்சள் கட்டப்​பட்ட பானை​யில் பொங்​கும் பொங்​கல், அந்த வீட்​டின் வளத்தை குறிப்​பதாக கருதப்​படு​கிறது. திண்​டுக்கல் மாவட்டம் வத்தல​குண்டு அருகே சித்தரேவு, செங்​கட்​டாம்​பட்டி...
அதிமுக உறுப்பினர் இல்லை என மற்றவர்களை சொல்லும் உரிமை பழனிசாமிக்கு இல்லை என தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி நேற்று மனு அளித்துள்ளார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்க, படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் பழனிசாமிக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் புகாரை பரிசீலிக்கவில்லை...
ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் பதாகைகளுடன் வந்த விவகாரத்தில், முதல்வர் கேட்டுக் கொண்டதால் உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாபஸ் பெற்றார். பேரவையில் நேற்று அப்பாவு பேசும்போது, "ஆளுநரை பேசவிடாமல், அதிமுக உறுப்பினர்கள், அந்த சார் யார் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் காட்டி நெருக்கடி கொடுத்தனர். பின்னர் சில மணித் துளிகளில் ஆளுநர் வெளியேறிவிட்டார். பேரவை நடவடிக்கைகளை தொடர்வதற்காக அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினோம். பொதுவாக ஆளுநர்...
சட்டப்பேரவையில் இருந்து நேற்று 2 முறை அதிமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பெள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசினார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவி்த்தனர். முதல்வர் பேச்சின் போது குறுக்கிட்டு...
டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு யார் காரணம் என்று சட்டப்பேரவையில் அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் விவாதம் நடைபெற்றது. பரஸ்பர குற்றச்சாட்டுக்களால் பேரவையில் பரபரப்பு நிலவியது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்: மதிமுக உறுப்பினர் மு.பூமிநாதன்: மதுரையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பலர் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் வராது என்பதை மக்களுக்கு...
ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் வந்து அதை வாசிக்காமல் சென்றார். பின்னர் அதுதொடர்பாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில்...
பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ), உலக வங்கி, குற்ற பதிவுகள் மற்றும் அவ்வப்போது நடைபெறும் தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு தரவு ஆதாரங்களை ஒருங்கிணைத்து இந்த பட்டியல்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் வேறு குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: குற்றம் நடந்த பிறகு, குற்றவாளியை கைது செய்யாவிட்டாலோ, காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள்...