‘பரிசுன்னு சொல்லி பாழான மனைகளை எங்க தலையில கட்டிட்டாங்க!’ – விசும்பும் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர்
admin - 0
2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரின் சாகசத்தை பாராட்டி, அவர்களுக்கு இரட்டிப்பு பதவி உயர்வுகளைக் கொடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கூடவே, 752 அதிரடிப்படை வீரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் இலவசமாக வீட்டு மனைகளையும் பரிசாக வழங்கினார்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு பொன்னம்மாபேட்டையில் உள்ள சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தலா 2 ஆயிரம் சதுர அடி வீதம் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன....
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து, கா.அண்ணாதுரையை திமுக தலைமை அண்மையில் விடுவித்தது. இது தொடர்பாக ‘தெறிப்பது நிஜம்’ பகுதியில் ‘அண்ணாவை கண்டுகொள்ளாத அண்ணாதுரை’ என்ற தலைப்பில் 15.2.25-ல் செய்தி வெளியானது.
அந்த சமயத்தில் அண்ணாதுரை நமது அழைப்பை எடுக்காததால் அவரது கருத்தை நம்மால் கேட்க முடியவில்லை. செய்தி வெளியான பிறகு நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய அண்ணாதுரை, “பட்டுக்கோட்டையில் திமுக-வுக்கு கட்சி அலுவலகம் இல்லாததால் தான் நான்...
மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும் தான் எங்களின் எதிரிகள் என பிரகடனம் செய்திருக்கும் நடிகர் விஜய், தனது தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணிக்கும் தயார் என அறிவித்திருக்கிறார். தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற விஜய்யின் அந்த கொள்கை முடிவுக்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது.
அரசியல் எதிர்காலம் கருதி இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை வந்துள்ளதால் கொள்கையா, கூட்டணியா என்று முடிவெடுக்க முடியாத...
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்: தலைமைச் செயலர் அறிவிப்பு
admin - 0
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச் செயலர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் அரசு மற்றும்...
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன்தொடர்ச்சியாக திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன...
சென்னை அண்ணா சாலை அருகே எல்லீஸ் சாலையில் உள்ளது எல்லீஸ்புரம். இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதாகிவிட்டதால் அவற்றை இடிக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் நேற்று வந்தனர். வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி வீடுகளை இடிக்க முற்பட்டபோது ஆத்திரமடைந்த மக்கள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், அதிகாரிகளும் சமரசம் பேசியதையடுத்து மக்கள்...
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை....
நெல்லை, தூத்துக்குடி, குமரியில் நடந்த தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: வழக்கின் பின்னணி என்ன?
admin - 0
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சுங்கத்துறை கூட்டாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளிய தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 5,832 கோடியை ராயல்டி இழப்பீடாக தமிழக அரசு வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2000 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி...
இந்திய மாநகராட்சிகளில் சென்னை முன்மாதிரியாக திகழ்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
admin - 0
இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் எப்படி இருக்கிறதோ அதுபோலத்தான் இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை, சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.1,893 கோடியில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 87 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...
மாநகராட்சி பொது கழிப்பிடத்தை அகற்ற எதிர்ப்பு: மின்ட் நார்த் வால் சாலையில் பொதுமக்கள் மறியல்
admin - 0
சென்னை மின்ட் பகுதியில் நார்த் வால் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 53-வது வார்டு, மின்ட் பகுதியில் உள்ள நார்த் வால் பகுதியில் தலா 9 இருக்கைகளுடன் ஆண் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இரு பொதுக்கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. இந்த பொதுக்கழிப்பிடத்தை இடிக்க மாநகாரட்சி அதிகாரிகள் நேற்று...










