இலங்கை கடற்படையினரால் 32 பேர் கைது: தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
admin - 0
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை மன்னார் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டியதாக கூறி 5 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல்...
மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய ஒரு வாரத்துக்குள் டெண்டர் விடப்பட உள்ளது.
வீடுகள் உள்ளிட்ட மின்இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின்இழப்பை தடுக்கவும், மின்கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது....
வழக்கறிஞர்கள் சட்ட வரைவை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
admin - 0
வழக்கறிஞர்கள் சட்ட வரைவை மத்திய அரசு முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு’ என்றார் அண்ணா. வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 என்பது சட்டத் துறையின் சுதந்திரம் மீது தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் ஆகும்.
தேசிய ஆணையம் (NJAC) வழியாக நீதிபதி நியமனங்களை...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், மாநில அரசு...
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான பாலியல் வழக்கில் சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
admin - 0
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சீமானை மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம்...
மத்திய அரசு திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
admin - 0
‘பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அதிகளவு பயன்பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களில் மிகவும் குறைவான அளவே முதலீடு என்ற போதிலும், 74 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது. எனினும், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளன. எனவே, இத்தகைய உணவு பதப்படுத்தும் குறு...
1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: மத்திய அரசின் மருந்தகத்தை விட 20% விலை குறைவு
admin - 0
தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மருத்துவரணி செயலாளர் நா.எழிலன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இங்கு பிற மருந்தகத்தை ஒப்பிடும்போது மருந்துகளின் விலை 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம்...
1948 பிப்ரவரி 24-ல் ஜெயராம் - வேதவல்லி தம்பதிக்கு மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் பெங்களூர் சென்றது. வேதவல்லிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தபோது, அவர் சந்தியாவானார்.
பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார் ஜெயலலிதா. பரதம், குச்சிபுடி, மணிப்புரி, கதக் எனப் பெரும்பாலான இந்திய நடனங்கள் ஜெயலலிதாவுக்கு அத்துப்படி. குடும்பம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது, சென்னை சர்ச்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் 2-வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
விராட் கோலி 14,000 ரன்கள்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 15 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில்...
போற்றப்பட்டார், வெறுக்கப்பட்டார், தெய்வமாக்காப்பட்டார்… ஆனால், அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. அவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது 16-வது வயதில் திரை நட்சத்திரமாக அறிமுகமானது முதல் தனது 68-வது வயதில் விடைபெறும் வரை தன்னை நம்பியே வாழ்ந்த ஆற்றல்மிகு அரசியல் ஆளுமை ஜெயலலிதா.
கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்ணசைவில் விதிக்கத் தெரிந்திருந்த உறுதிமிக்க தலைவராக அறியப்படுபவர் ஜெயலலிதா. பத்து வார்த்தைகள் பேசி விளக்க வேண்டியதை, ஜெயலலிதாவின் ஒற்றைப் பார்வை உணர்த்திவிடும். அந்த அளவுக்கு...










