திருநெல்வேலி கவின் கொலை வழக்கு: இளம்பெண்ணின் பெற்றோர் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாகக் கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர் சுர்ஜித் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ண குமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோரும் கைது...
ஜெம் வீரமணி வழக்கில் திமுகவை குற்றம்சாட்டிய முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் ஆதாரம் கேட்டு விசாரணை நடத்த வேண்டும்: திமுக பொருளாளர் வழக்கு
admin - 0
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் திமுகவை குற்றம்சாட்டிய முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ஆதாரம் கேட்டு, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம்...
முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவுமான ரகுபதிக்கு எதிராக தவெக வேட்பாளர் சிந்தாமணி தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்....
வன வெளியேற்ற நடவடிக்கையை கண்டித்து கடமலைக்குண்டுவில் நடந்த போராட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து தன்னிச்சையாக ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த வருசநாடு, மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கியது. இதனைக் கண்டித்து மலைவாழ் மக்கள் பல்வேறு...
ஜனநாயக உரிமைகள், தமிழக நலனை காக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: தாராபுரம் வாக்காளர்களுக்கு கனிமொழி அழைப்பு
admin - 0
ஜனநாயக உரிமைகளையும் தமிழகத்தின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், திமுக வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது: மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் அளித்த வாக்குறுதிகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் பொதுமக்களை அணுகி வாக்கு கேட்பதை விட, அவர்களின்...
சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம் கிரானைட்’ உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும், வீரமணியின் மற்றொரு உதவியாளர் கணேசனும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல், போலீஸ் அதிகாரிகள், முக்கிய...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனக்கு எதிராக பதியப்பட்டு்ள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள மனு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகியுள்ள பி.டி. அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு...
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதைவிட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்: நாராயணன் திருப்பதி கருத்து
admin - 0
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் தேர்தலில் தோல்வியடையும் போதெல்லாம் தேர்தல் ஆணையம், நீதித் துறை, ராணுவம் மீது குற்றம் சுமத்துகின்றன.
அந்த வகையில், தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புகின்றன. தேர்தல் ஆணையர்கள் மூவரும் இணைந்து, ஒருமித்த கருத்துடனேயே முடிவுகளை எடுக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மூலம் லட்சக்கணக்கான போலி...
கடந்த வாரம் வெள்ளித்திரையில் வெளியான ‘டோரதி’ படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆன்லைனில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் படம் குறித்த எதிர் விமர்சனங்களுக்கு எதிராக திருநங்கைகள் குரல் கொடுத்துள்ளனர்.
‘டோரதி’ படம் தங்களது நிஜ வாழ்வின் யதார்த்த அனுபவத்தை பேசி உள்ளதாக திருநர் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்காக படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தாங்கள் நன்றி கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தப் படம்...
எப்போதும் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிறந்த முறையில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வை நடத்தி முடித்துள்ளது. அநேகமாக எங்கும் யாரும் குறை கூற முடியாத அளவுக்கு நன்கு திறம்பட நடத்தியுள்ள தேர்வாணையம் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துகள்.
எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும் - குரூப் ஒன் முதல் நிலை தேர்வு வினாத்தாள், மன்னிக்கவும், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச நடப்புகள் முற்றிலுமாக விலக்கி...









