அரசு திட்டங்களுக்கு புள்ளி விவரங்கள் தொகுப்பு: தமிழக அரசு அலுவலர்களுக்கு பெங்களூரு ஐஐஎம்-ல் பயிற்சி
admin - 0
அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை தொகுப்புது குறித்து பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் தமிழக அரசு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: “அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்யவும், தகுதியுடைய பயனாளிகள் எவரேனும் விடுபட்டு விட்டனரா என்பதை கண்டறியவும், கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையவும், அதன் வாயிலாக...
திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரூ.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவொற்றியூர் மெட்ரோ பணியின்போது, மாணிக்கம் நகர் பிரதான சாலையில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, அஜாக்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது. இங்கிருந்து தற்போது பிராட்வே, தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினமும் 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள்...
வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு – அமைச்சர் தகவல்
admin - 0
வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும், இக்குழு அளிக்கும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் சு.முத்துசாமி நேற்று கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன் இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பகட்ட...
அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின்விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்காக மத்திய அரசு 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது: மத்திய மின்துறை அமைச்சர் ஸ்ரீபாத யேசோ நாயக் அண்மையில் தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில மின்துறை அமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிப்பதற்காக, சீரான...
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு மார்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
admin - 0
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விவரங்கள் https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி...
தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி: சென்னையில் 19-ம் தேதி நடைபெறுகிறது
admin - 0
தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு சென்னையில் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான ஒருநாள் சாட்ஜிபிடி பயிற்சி, சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. சாட்ஜிபிடி மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளைக் குறைக்கவும், திறன்களை மேம்படுத்தவும்...
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஆங்காங்கே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் புகார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் மிகப்பெரும் தாக்கத்தை...
இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு
admin - 0
அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க...
திருப்பரங்குன்றம் மலையை காக்க சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி வழக்கு: இடத்தை மாற்ற அறிவுரை
admin - 0
அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை காக்க சென்னையில் வேல்யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்...
கல்லூரி மாணவர்களை செஞ்சிலுவை சங்கத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை தமிழக ஆளுநரும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவருமான ஆர்.என்.ரவி திறந்துவைத்து பேசியதாவது:
மனித சமூகத்துக்கு சேவை செய்வது என்பதுதான் செஞ்சிலுவை சங்கத்தின்...










