Google search engine
திமுக ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வரவேண்டிய 25 முக்கிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.34 லட்சம் கோடியாகும். இதனால் 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். டாடா...
நண்​பர்​களு​டன் கடலில் குளித்​த​போது, அலையில் இழுத்​துச் செல்​லப்​பட்ட மாணவன் உயி​ரிழந்​தார். சென்​னை, புழு​தி​வாக்​கத்​தைச் சேர்ந்​தவர் இஷாந்த் குமார் (17). இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்​து​விட்​டு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி ஒன்​றில் சேர​விருந்​தார். இந்​நிலை​யில், இஷாந்த் குமார் தனது நண்​பர்​கள் 4 பேருடன் நேற்றுமுன்தினம் காலை திரு​வான்​மியூர் கடற்​கரைக்கு சென்​றார். அங்கு அனை​வரும் ஒன்​றாக கடலில் குளித்​தனர். அப்​போது, அவர்​கள் ஒரு​வரையொரு​வர் தொட்​டுப் பிடித்து விளை​யாடிய​தாக கூறப்​படு​கிறது. அந்த சமயத்​தில்,...
வாட்​ஸ்​-அப் செயலி​யில் வழங்​கப்​படும் 44 வித​மான சேவை​களை இது​வரை 1.86 லட்​சம் பேர் பெற்று பயன் அடைந்​திருப்​ப​தாக சென்னை மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக பெருநகர சென்னை மாநக​ராட்சி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் வழங்​கப்​படும் அத்​தி​யா​வசிய சேவை​களை பொது​மக்​கள் எளி​தில் பெறு​வதற்கு ஏது​வாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வாட்​ஸ்​-அப் செயலி சேவை புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி, பொது​மக்​கள் மாநக​ராட்​சி​யின் 94450 61913 என்ற...
தமிழகம் முழு​வதும் 14 ஐபிஎஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மதுரை, திருப்பூர், சேலத்​துக்கு புதிய காவல் ஆணை​யர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: தமிழக மின்​வாரிய விஜிலென்ஸ் அதி​காரி​யாக இருந்த ஆயுஷ் மணி திவாரி தலை​மை​யிடத்து கூடு​தல் டிஜிபி-​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். திருப்​பூர் காவல் ஆணை​ய​ராக இருந்த எஸ்​.​ராஜேந்​திரன் மதுரை காவல் ஆணை​ய​ராக​வும், அங்கு காவல் ஆணை​ய​ராக இருந்த கபில்​கு​மார் சரத்​கர் வட சென்னை கூடு​தல்...
தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் எவ்​வித மாற்​ற​மும் இன்றி முழு​மை​யாக வாசித்​தார். கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் ஆளுந​ராக இருந்த ஆர்​.என்​.ர​வி, 2023-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில், அரசு தயாரித்த உரை​யில் சில​வற்றை தவிர்த்​தும், சில தகவல்​களை சேர்த்​தும் வாசித்​தார். அதன்​பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்​டு​களில் பேர​வைக் கூட்​டத்​தின் தொடக்​கத்​தில் தேசிய கீதம் இசைக்​கப்​பட​வில்லை என்று அதிருப்தி தெரி​வித்​து, தனது...
தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் உரைக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் பலர் வரவேற்​பும் எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: ஆளுநர் உரை ஆளுங்​கட்​சிக்கு முழு ஆதரவை தெரிவிக்​கும் அறி​விப்​பாக மட்​டுமே இருந்​தது. இது​போன்ற அறி​விப்​பு​களை நிறைய பார்த்​து​விட்டோம். வெறும் அறி​விப்​பாக மட்​டுமில்​லாமல், அதி​காரப்​பூர்​வ​மான, ஆளு​மைமிக்க ஒரு ஆட்​சி​யாக இந்த ஆட்சி இருக்க வேண்​டும். பாலியல் குற்​ற​வாளி​களுக்கு என்​க​வுன்ட்டர்​தான் தீர்​வாக அமை​யும். சட்​டப்​பேர​வை​யில் தமிழ்த்​தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் ஆரம்​பத்​தி​லும்,...
 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து...
“எனது அன்புச் சகோதரரின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய, பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகிறேன்,” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,”எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள்...
“தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தேமுதிகவும் ஆதரிக்கிறது. கூடவே, மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை யோசிக்க வேண்டும்.” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள்...
 ஸ்​டெர்​லைட் ஆலையை திறக்க அனு​ம​திக்க கூடாது என முதல்​வரை நேரில் சந்​தித்து வைகோ வலி​யுறுத்​தி​னார். தமிழக முதல்​வர் விஜய்யை மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று தலைமை செயல​கத்​தில் சந்​தித்து பேசி​னார். அப்​போது தூத்​துக்​குடி மாவட்​டம் மற்​றும் தமிழகத்​தில் எந்த பகு​தி​யிலும் சுற்றுச்​சூழலுக்கு பாதிப்பு ஏற்​படுத்​தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்​கக்​கூ​டாது என வலி​யுறுத்​தி​னார். முதல்​வரை சந்​தித்த பின் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஸ்டெர்​லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவ​சா​யிகள் மற்​றும்...