சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று காலை 5.10 மணிமுதல் மாலை 4.10 மணிவரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.
பயணிகள் வசதிக்காக தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30...
சாயோலைரம் நிறுத்தப்பட்டிருந்த கேட்பாரற்ற 973 வாகனங்கள் ஏலம்: சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியீடு
admin - 0
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 973 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் அதை ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னையில் குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னை போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடிவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் கேட்பாரற்ற நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்...
இந்தாண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல், புதிய நீராழி மற்றும் காரிய மண்டபம் கட்டுவதற்கான பணியையும், ரூ.85 லட்சம் செலவில் புதிதாக திருத்தேர் செய்கின்ற பணியையும் மற்றும் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கைலாசநாதர் கோயிலை உயர்த்தி கட்டுவதற்கான பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று...
உலக கிளைக்கோமா வாரத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. உலக கிளைக்கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ‘எதிர்காலத்தை தெளிவாக காணுங்கள்’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
கண் அழுத்த நோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து...
மெட்ரோ ரயில் திட்டம்: போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையில் கடைசி பாலத்தின் கட்டுமான பணி நிறைவு
admin - 0
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் போரூர் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்டப் பாதையில், கடைசி பாலத்தின் கட்டுமானப்பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும்,...
உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழை ஆட்சிமொழி ஆக்குவதை எது தடுக்கிறது? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி
admin - 0
தமிழைப் போலவே மற்றவர் தாய்மொழியையும் மதிக்கிறோம். ரூபாய் நோட்டில் உள்ள தாய்மொழியான தமிழை ஆட்சி மொழியாக்குவதை எது தடுக்கிறது? என்று மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியை கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும்....
“யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாதா?” – அதிமுக நிர்வாகியை தாக்கிய ராஜேந்திர பாலாஜி: பின்னணி என்ன?
admin - 0
அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர்,...
செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
admin - 0
சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், கோவையில் தனியார் மதுபான ஆலை, கரூரில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு என 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து...
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 7) முதல் வரும் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 10-ம் தேதி...
எம்ஜிஆர் நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற தமிழிசை சவுந்தரராஜனை 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் சிறை பிடித்தனர். அவரை விடுவிக்க கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜக சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம்...










