Google search engine
கடந்த 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி. மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கோயில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும் மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு...
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இசைக்கல்லூரி அருகே சாலை பணிக்காக மரங்கள் வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில பசுமைவழிச் சாலை - துர்காபாய் தேஷ்முக் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பசுமைவழிச் சாலை வழியாக அடையார், கிண்டி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.26 கோடியில் சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு, பசுமைவழிச் சாலையில் இருந்து,...
இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று தான் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாக சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில்...
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை நங்கநல்லூரில் பாஜக மண்டல் அலுவலகத்தை நேற்று எல்.முருகன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுத பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஐநாவில் முதன் முதலில் தமிழ்...
வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும், என வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து, வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை...
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்கள் குழு வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நேற்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்...
சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுபெறும் நெல்லை பேராசிரியை விமலாவுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வோருக்கு சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘எண்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’...
திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (மார்ச் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 11-ம்...
மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை என்றால், தாமாக இழப்பீடு வழங்கும் சேவையை செயல்படுத்த வேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மின்வாரியம் இதுவரை செயல்படுத்தவில்லை. புதிய மின்இணைப்பு, குறைபாடு உடைய மீட்டரை மாற்றுவது, மின்கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட மின்சார சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து தரும் வகையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் செய்து தரவில்லை...
மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: தமிழியல் உயராய்வுகளுக்கென சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று வருகை புரிந்தார். நிறுவன ஆய்வுப் பணிகளை...