திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.அன்பழகன், நூலகங்கள் பற்றி பேசியதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது:
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தை வெளிப்படுத்தி காட்டியுள்ளார். குறிப்பாக, திருச்சியில் ரூ.290 கோடியில்...
தமிழகத்தில் இன்று முதல் ஏப்.6-ம் தேதி ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று...
கடந்த நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்த வேண்டும்.
இதில், கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.1,750 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், 2024-25...
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் மொத்தம் 5,381 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு, சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை, 2 கட்டங்களாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி சுங்கக்...
அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. அழைப்பு
admin - 0
சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த துறைகள் அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கண்டுபிடிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவுசார் சொத்துரிமை விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடக்கலை கல்லூரியில் சிறந்த 2 துறைகள் அல்லது சிறந்த மையங்களுக்கும், அதேபோல், அண்ணா பல்கலைக்கழக இணைப்புக்...
சென்னை | ரூ.80 பார்க்கிங் கட்டணம் வசூலித்த வணிக வளாகம்: வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு
admin - 0
வாடிக்கையாளரிடம் ரூ.80 பார்க்கிங் கட்டணமாக வசூலித்த தனியார் வணிக வளாகம், அவருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொசபேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்றபோது தனது இருசக்கர வாகனத்தை வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றார்.
இந்நிலையில், அங்கு 1 மணி 57 நிமிடம் வாகனத்தை நிறுத்தியதற்காக அவரிடம் இருந்து ரூ.80...
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா ஏப். 6-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மதுரை வரும்போது, விமான நிலையத்தில் அவரை சந்தித்து பேச அனுமதி கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைமை தன்னை சந்தித்து பேசிய...
திருவாரூரில் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட் டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பிரசித் திபெற்ற ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடை பெறவுள்ளது.
ஆசியாவிலேயே பெரிய தேர்: அலங்கரிக்கப்பட்ட நிலையில்...
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்க வில்லை என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இது தொடர்பாக ஒசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என அமித் ஷா பதிவிட்டிருந்தார். இதன் மூலம்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்.7 முதல் மார்ச் 27 வரை கனிம வளம் கடத்தல் தொடர்பாக நடந்த ஆய்வில், விதிமீறி கனிம வளம் கடத்திய 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் கனிம வளம் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்....










