Google search engine
“தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழக அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு குளிரூட்டும் நவீன கண்ணாடிகளை (சன்கிளாஸ்) காவல் ஆணையர் அருண் நேற்று வழங்கினார். வெளிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், களத்தில் நின்று பணி செய்யும் போக்குவரத்து போலீஸார் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, வெயிலை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு தினமும் 2 பாக்கெட் மோர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து போலீஸார் 1,500 பேருக்கு குளிரூட்டும்...
சென்னையில் விரைவில் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் வங்கியின் நிதியுதவியின் கீழ் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மொத்த ஒப்பந்த முறையில் (ஜிசிசி) மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டர் விடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக ஏசி, குளிர்சாதன வசதியில்லா பேருந்து என 625 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை உட்பட 35 இருக்கைகள் இருக்கும். இந்த பேருந்துகளுக்கான மின்னேற்றம்...
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச் 28) நடைபெறும் நிலையில், அன்று நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன்...
‘‘கோடை மின்தேவையை சமாளிக்க 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்’’ என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு கோடை காலத்தில் மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு...
“மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர்கள் அளிகும் பேட்டியில் அது புலப்படுகிறது. உத்தரப் பிரதேச...
பொது​மக்​கள் தங்​களது சொத்​து​வரி, தொழில்​வரியை ரம்​ஜான் விடு​முறை​ தினத்திலும் செலுத்தலாம் என மாநக​ராட்சி அறி​வித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் வசிக்​கும் பொது​மக்​கள், தங்​களது சொத்​து​வரி, தொழில்​வரி மற்​றும் நிறுமவரி ஆகிய​வற்றை மாநக​ராட்​சி​யின் வரு​வாய்த்​துறை​யில் செலுத்தி வருகின்​றனர். தொழில் உரிமங்​களை​யும் புதுப்​பித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் நடப்பு நிதி​யாண்டு மார்ச் 31-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதையொட்டி மாநக​ராட்சி பகு​தி​களில் வசிக்​கும் பொது​மக்​களின் நலன் கருதி சொத்​து​வரி, தொழில்​வரி மற்​றும் நிறுமவரி ஆகிய​வற்றை பொது​மக்​கள்...
தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு 100 அடியில் சிலை வைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்தியலிங்கம் பேசும்போது, ‘‘தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 1972–ம் ஆண்டு சிலை வடிவமைக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று உள்ளே சிலையை வைக்காமல் வெளியே வைத்தார்கள். ராஜராஜசோழனின் பெருமையை உணர்ந்து இந்திய கடற்படையின் திட்டங்களிலேயே அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 216...
தமிழை அழிக்க நினைக்​கும் ஆதிக்க மொழி எது​வாக இருந்​தா​லும் அதை அனு​ம​திப்​ப​தில்லை என்​ப​தால்​தான் இரு​மொழி கொள்​கையை கடைப்​பிடிக்​கிறோம் என பேர​வை​யில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று இரு​மொழிக் கொள்கை தொடர்​பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானத்​தின் மீது விவாதம் நடந்​தது. எதிர்க்​கட்​சித் துணை தலை​வர் ஆர்​.பி.உதயகு​மார் பேசும்​போது, "உல​கத்​திலேயே இது​வரை ஒரு மொழிக்​காக போராட்​டங்​களை நடத்தி உயிர்​களை தியாகம் செய்த இனம் நமது...
பல்வேறு ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 31 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு ரயில்வே போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். சென்னையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் செல்லும்போது, அவர்களுக்குள் மோதல் நடப்பது அதிகரிக்கிறது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் மோதலைத் தடுக்கும் வகையில், மின்சார ரயில்கள்,...