Google search engine
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 2 வாரங்களாக தொழில்நுட்பக் கோளாறு பிரச்சினை காரணமாக, தமிழகம் முழுவதும் வாகனப் பதிவுச் சான்றுக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். மோட்டார் வாகனச் சட்டப்படி, புதிய வாகனங்களை பதிவுச் சான்று பெற்ற பின்னரே சாலையில் ஓட்டவேண்டும். இந்தச் சான்றை பெற இணையவழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக வாகன விற்பனை முகவர்களே உரிமையாளர் விவரங்களை பெற்று, உரிய கட்டணங்களை செலுத்தி இணையவழியாக விண்ணப்பம்...
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவர் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையின்போது அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசும்போது, “சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவரது பிறந்த ஊரான தேனி மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கு முதல்வர் ஆவன செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் ஐடி பார்க் அமைக்க...
திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ரூ.2 கோடி செலவில் முதல்வர் திறனகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்...
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த 2024 மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்...
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன், சகோதரர்களின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்கள் என சென்னை, திருச்சி, கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் நேருவின் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்)...
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த ரூ.576 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். மீனவர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படை கைப்பற்றிய...
அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமையலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில் அண்ணாமலை மாற்றம் என்று வரும் செய்திகளும் தமிழக பாஜக வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பேட்டியிலிருந்து… தன்னை இபிஎஸ் சந்தித்த பிறகு, 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிவிட்டார் அமித் ஷா. அது அதிமுக அங்கம் வகிக்கும் தேஜகூ ஆட்சியா? -...
போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் கட்டணம் செலுத்தி, ஏப்.20-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சங்க உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் கீழ்வலம் கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள மனை திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் தேவைக்கேற்ப 600 சதுரஅடி ரூ.2.07 லட்சம் முதல்...
புதிய தலைவர் நியமனம், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவை பொருத்தவரை 2026 தேர்தலில் தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, 4...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட சென்றதாகவும், மக்கள் பிரச்சினை குறித்து அமித் ஷாவை சந்தித்ததாகவும் பழனிசாமி கூறினாலும்,...