சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே: நீதிபதி வேதனை
admin - 0
சாதியை காரணம் காட்டி கோயில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் மறுவடிவமே என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
‘பெரியபுராணம் தந்த சேக்கிழார் குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் இன்று (மே 13) தொடங்கி மே 16 வரை நடைபெறவுள்ளது. இந்த கோயில் திருவிழாவுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சாதியினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுகிறது. மற்ற சமுதாய மக்களிடம் நன்கொடை பெறப்படவில்லை’ என...
அண்ணா மேம்பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த வழக்கு: ஓட்டுநரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அரசு மாநகரப் பேருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை விடுதலை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 27 அன்று பிராட்வேயில் இருந்து வடபழனி நோக்கிச்சென்ற மாநகர அரசுப் பேருந்து அண்ணா மேம்பாலத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 38 பயணிகள்...
‘வாடகையக் கூட்டு… கடையக் காலி பண்ணு..!’ – ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்கு வந்த சோதனை
admin - 0
ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் வாசிப்பு ஆர்வலர்கள்.
1875-ல் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவரால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது நூலகம் தொடங்கப்பட்டது. அவரது பெயராலேயே திறக்கப்பட்ட இந்த நூலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக வணிக வளாகம் ஒன்றும் பிற்பாடு கட்டப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் எதிரே...
இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! – குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்
admin - 0
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள்.
சுமார் 75 வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் மகாலிங்கம் என்பவர் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு அலுவலகம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்கான...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள கும்பர்பேட்டையை சேர்ந்தவர் முனீர் கான் குரேஷி (36). கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு தனது யூ டியூப் பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ''பஹல்காம் தாக்குதலானது மத்தியில் ஆளும்...
வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் தாய்மார்களை போற்றுவோம்: அன்னையர் தினத்துக்கு தலைவர்கள் வாழ்த்து
admin - 0
அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் தாய்மார்களை போற்றுவோம் என வாழ்த்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து வலிமை, இரக்கம் மற்றும் குணங்களைச் செதுக்கும் அமைதிச் சிற்பிகளான அனைத்து தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் தன்னலமற்ற அன்பின் மூலம் தலைமுறைகளை வரையறுத்து, வாழ்வின் திருப்புமுனைகளில்...
தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு ரஜினி பாராட்டு: பிரதமருக்கு ஜி.கே.வாசன் நன்றி
admin - 0
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இந்திய அரசுக்கு பாராட்டுகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல் சம்பவம், போர்நிறுத்தம் ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது....
தமிழகம் 897 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ஏற்றுமதி, உயர்கல்வி மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்த மகத்தான பணிகள் பாராட்டப்பட்டன.
முதல்வரின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக தொடங்கப்பட, நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு...
மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து இயக்கத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியது.
தற்போது 146 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 22 பேருந்துகள் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்காகவே பிரத்யேகமாக இயங்குகின்றன. இந்நிலையில் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் மேலும் 100 மினி பேருந்துகள் கொள்முதலுக்கான...
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் நேற்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
விபத்தின்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில்...










