Google search engine
 ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் ஜீவன் லால் லவாடியா கைது செய்யப்பட்டு உள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள வருமான வரித் துறை அலுவலகத்தின் ஆணையராக ஜீவன் லால் லவாடியா பணியாற்றி வருகிறார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திடம் இருந்து இவர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்....
காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​திய முப்​படைகளும் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின. அதன்​பிறகு, இந்​தி​யா​வின் 15 நகரங்​களை குறிவைத்து கடந்த 8 மற்​றும் 9-ம் தேதி​களில் ட்ரோன்​கள், ஏவு​கணை​களை பாகிஸ்​தான் வீசி​யது. ஆனால், அவை அனைத்​தை​யும் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட ஆகாஷ் ஏவு​கணை​கள் வானத்​திலேயே தவிடு பொடியாக்கின. இந்த ஆகாஷ் ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகத்​தின் (டிஆர்​டிஓ) விஞ்​ஞானி டாக்டர் பிரகலாத் ராமா​ராவ்​தான்...
பிஹாரின் பக்​ஸர் மாவட்​டம் நந்​தன் கிராமத்​தைச் சேர்ந்த சிப்​பா​யான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வரு​கிறார். அவர் தனது திரு​மணத்​திற்​காக விடுப்பு எடுத்​துக் கொண்டு பக்​ஸர் வந்​திருந்​தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்​தது. இதனிடையே, பஹல்​காம் தாக்​குதலுக்கு பின் எல்​லை​யில் பாகிஸ்​தானுடன் போர் தொடங்கி விட்​டது. இதனால், இந்​திய ராணுவம் தனது வீரர்​களின் விடுப்பை ரத்து செய்​து, உடனடி​யாக பணிக்கு திரும்​பு​மாறு அறி​வுறுத்​தி​யது. இதை ஏற்று திரு​மண​மான...
ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சர்வ எல்லையில் 2,000 கி.மீ தூரத்துக்கு எல்லை பாதுகாப்பு படை...
கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இதன்பிறகு...
அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வரக்கோரி கடந்த 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் கருப்பு...
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியா கொடுத்த பதிலடியில், பாகிஸ்தானில் லாகூர் உட்பட பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள்...
பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊருவிய பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனாட சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை கண்ட பிஎஸ்எப் வீரர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தனர். அவரது உடல், பஞ்சாப் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எப் அதிகாரி ஒருவர்...
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை. ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதன்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய...
கர்நாடக இந்து அறநிலைய மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய‌ ராணுவ வீரர்களுக்காக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அனைத்து இந்து கோயில்களிலும் ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பலமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஹனுமன் கோயிலில்...