வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழுதினார். “பாரத அன்னையே நான் உனக்கு தலைவணங்குகிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வந்தே...
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் வங்கி கணக்கில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் ரூ.56 லட்சம் மோசடி
admin - 0
திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.56 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்டில் அசன்சோல் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். கல்யாண் பானர்ஜியின் ஊதியம், படிகள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.
தற்போது ஸ்ரீராம்பூர் தொகுதி...
காங்கிரஸ் தலைவர் கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்து கொள்ளும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்தன. கடந்த 1925-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்கப்பட்டது கிடையாது.
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சுமார் 52 ஆண்டுகள் தேசிய கொடியும் ஏற்றப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ்...
ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்
admin - 0
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து பேருந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்னூல் அருகே பேருந்து தீப்பற்றி 20 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து அனைவரையும் உலுக்கியது. இதை தொடர்ந்து தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் தாண்டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆந்திர...
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி நக்சலைட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் சரண் அடைவோருக்கு அரசு மறுவாழ்வு அளித்து வருகிறது. . சத்தீஸ்கரில் கடந்த மாதம் மட்டும் சுமார் 300 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் கேசிஜி (கைராகர்-சுய்காடன்-கண்டாய்) மாவட்டத்தில் முக்கிய பெண் நக்சலைட் ஒருவர் நேற்று சரண் அடைந்தார். கமலா சோடி (30)...
கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்மது ஷரீப் ஷா என்பவர் ஜம்முவில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜதீந்தர் சிங் என்கிற பாபு சிங்கிடம் ரூ.6.9 லட்சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டார்.
இந்தப் பணம் இந்தியாவில் போதைப் பொருள் விற்பனை மூலம் ஈட்டப்படுவதும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாபு சிங் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில்...
பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அங்குள்ள வாக்குச் சாவடிக்கு அவர் நேற்று சென்றார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்றனர். கற்கள் மற்றும் காலணிகளை கார் மீது வீசி எறிந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஜய்...
பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சென்று வாக்களித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், “தவாவில் உள்ள ரொட்டியை புரட்டிப்போட வேண்டும். இல்லாவிடில் அது கருகிவிடும். 20...
பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் அனில் அம்பானிக்கு (66) அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன்பெற்று அதனை முறையாக செலவு செய்யாமல் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே சோதனை நடத்தி அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை...










